அக்.17 முதல் அதிமுக தொடக்கவிழா பொதுக்கூட்டங்கள்

அதிமுகவின் 53ஆவது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள் அக்டோபர் 17ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கட்சியின் கொள்கை பரப்புச்செயலர் மு.தம்பிதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக 53ஆவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, 17.10.2024 முதல் 20.10.2024 வரை நான்கு நாட்கள் அதிமுகவின் 53ஆவது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள் கட்சி அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களிலும், கட்சி அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, ஆந்திரம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.

பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள், அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் அடங்கிய பட்டியல் இத்துடன் வெளியிடப்படுகிறது.

மாலத்தீவு அதிபர் அடுத்த வாரம் இந்தியா வருகை

மாவட்ட செயலாளர்கள், தங்கள் மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தை, கட்சி, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்ஜிஆர் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உள்பட கட்சியின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரநிதிகளுடனும் இணைந்து, சிறப்புப் பேச்சாளர்களுடன் தொடர்புகொண்டு, பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி, அதன் விபரங்களை தலைமைக்கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கோட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

லடாக் ஆதரவாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை: உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்!

பெண் காவலருக்கு பாலியல் வன்கொடுமை!

ஏ.ஐ. தொழில்நுட்பம் ஆதிக்கம்: போன்பேவில் 60% ஊழியர்கள் பணிநீக்கம்!