அசத்திய மாமியார்… மிரண்டுபோன புதுமாப்பிள்ளை!

மனைவியை அழைத்துவரச் சென்ற புதுமாப்பிள்ளை… வியக்க வைத்த மாமியாரின் உபசரிப்பு!

ஆந்திரா உணவு திருவிழா

ஆந்திராவில் மனைவியை அழைத்துவரச் சென்ற புதுமாப்பிள்ளைக்கு 100 வகை உணவு வகைகளைப் பறிமாறிய மாமியாரின் உபசரிப்பு வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தைச் சேர்ந்த ரவி தேஜா என்பவருக்கும் ரத்னகுமாரிக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில் தமிழ்நாட்டில் ஆடி மாதத்தைப் போல ஆந்திராவில் ஆஷாட மாதத்தையொட்டி தனது மனைவியை பிரிந்திருந்த ரவி தேஜா, மீண்டும் தனது மனைவியை அழைத்துச் செல்ல அவரது வீட்டுக்கு வந்தார்.

இதனையொட்டி 100 வகையான உணவுகளை பரிமாறி மருமகனை ஆனந்தத்தில் திளைக்க வைத்திருக்கிறார் ரவி தேஜாவின் மாமியார்.

விளம்பரம்

#JUSTIN
கூச்சப்படாம சாப்டுங்க மாப்ள
ஆஷாடம் (ஆடி) மாதம் முடிந்து மனைவியை அழைத்துச் செல்ல வந்த மருமகனுக்கு 100 வகை பலகாரங்களுடன் விருந்து வைத்த மாமியார்
#AndhraPradesh | #Food#News18Tamilnadu | https://t.co/3v5L32pe7bpic.twitter.com/X1leFDgaip

— News18 Tamil Nadu (@News18TamilNadu) August 11, 2024

விளம்பரம்

சாப்பிடுவதில் விருப்பமுள்ள மாப்பிள்ளையாக இருந்தால், இன்று ஒரு புடிபுடித்துவிடலாம் என்று ஆர்வமாக இருப்பார். ஆனால், சாப்பாட்டில் விருப்பமில்லாதவராக இருந்தால், கண்டிப்பாக 100 வகை உணவுகளைப் பார்த்து மிரண்டு போயிருப்பார். இந்த புதுமாப்பிள்ளையும் மிரண்டுதான் போயிருக்கிறார்.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Andhra Pradesh

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்