அசாம் வெள்ள பாதிப்பு.. உயிரிழந்தோர் எண்ணிக்கை 72ஆக உயர்வு!

அசாம் வெள்ள பாதிப்பு.. உயிரிழந்தோர் எண்ணிக்கை 72 ஆக உயர்வு!

வெள்ளம்

அசாம் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்தது.

9 பெரிய ஆறுகளின் நீர்வரத்து அபாய அளவைத் தாண்டி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் உள்ள 3,154 கிராமங்களில் 19 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திங்கள் மாலை வரை 48,124 பேர் 245 நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

சுமார் 50 ஆயிரம் ஹெக்டேர்களில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் சரணாலயத்தில் காண்டாமிருகங்கள் உட்பட 137 விலங்குகள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தன. 99 விலங்குகள் மீட்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

விளம்பரம்

இதனிடையே, நேபாளத்தில் தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பிகார் மற்றும் உத்தரபிரதேசத்தின் சில மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு நிலவியது. இந்தியா – நேபாள எல்லையில் உள்ள வால்மீகிநகர் கந்தக் தடுப்பணையின் 36 கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Assam
,
Flood
,
Heavy rain

Related posts

திருப்பதி லட்டு விவகாரம் – சுப்ரீம் கோர்ட்டில் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு

மசோதாக்களை காரணமின்றி கவர்னர் நிறுத்தி வைக்கிறார் – சபாநாயகர் அப்பாவு

சத்தீஷ்கார்: வாலிபரை தீண்டிய பாம்பை தகனத்தின்போது உயிருடன் எரித்த கிராமவாசிகள்