அசோக்நகர் பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு விவகாரம்: தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம்!

சென்னை: சர்ச்சைக்குரிய வகையில் ஆன்மிக சொற்பொழிவு நடந்த புகாரில் முதற்கட்ட நடவடிக்கையாக அசோக்நகர் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் சில நாட்களுக்கு முன்பு, அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், தனியார் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஆன்மிகச் சொற்பொழிவாளரான மகாவிஷ்ணு பங்கேற்று சொற்பொழிவு ஆற்றியுள்ளார்.

பள்ளியில் ஆன்மிகக் கருத்தா?

இந்த நிலையில், மகாவிஷ்ணுவின் சொற்பொழிவின்போது, மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். மாணவிகளை கண்களை மூடச் சொல்லிப் பாடல்களை ஒலிக்கவைத்தது மட்டுமின்றி, அவரது பேச்சைக் கேட்டு பலர் கண்ணீரும் விட்டுள்ளனர். நம்மை மீறி ஒரு சக்தி இருக்கிறது, யோக தீட்சை தருகிறேன் என்றெல்லாம் பேசியுள்ளார்.

ஆசிரியர் கண்டிப்பு

சொற்பொழிவின்போதே, அந்தப் பள்ளியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒருவர் மகாவிஷ்ணுவின் சொற்பொழிவைக் கண்டித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதை அடுத்து பள்ளிகளில் களில் ஆன்மிகச் சொற்பொழிவுகள் நடத்தக் கூடாது என ஆசிரியர் வாதிட்டுள்ளார். இருப்பினும்,ஆன்மிகச் சொற்பொழிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆசிரியரை மற்ற ஆசிரியர்கள் சமாதானம் செய்துள்ளனர்.ஆனால் மகாவிஷ்ணுவின் சொற்பொழிவு தொடர்ந்துள்ளது.

சமூகவலைதளங்களில் விடியோ

இந்த நிகழ்ச்சி தொடர்பான விடியோவையும் தனது யூடியூப் பக்கத்தில் மகாவிஷ்ணு வெளியிட்டுள்ளார். விடியோ வெளியானதும், இணையவாசிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துடன், கண்டனமும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கல்வியாளர்கள், அரசியல் கட்சியினர் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, கல்விக்கு தொடர்பில்லாத எந்த நிகழ்ச்சியையும் அரசு அனுமதியின்றி பள்ளிகளில் நடத்தக் கூடாது என பள்ளிக்கல்வித் துறை செயலாளர் மதுமதி உத்தரவிட்டுள்ளார்.

விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்

அரசுப் பள்ளியில் சிறப்பு விருந்தினரின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆசிரியர் சங்கருக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், இந்த விவகாரத்தில் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் பாடமாக இருக்கும் வகையில் நடவடிக்கை இருக்கும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

விசாரணைக் குழு

இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பந் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மகாவிஷ்ணு, மாற்றுத்திறனாளி ஆசிரியரை அவமானப்படுத்திய விவகாரத்தில் போலீசாரும் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம்

இந்த நிலையில், பள்ளியில் பிற்போக்குத்தனமான சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு முதற்கட்ட நடவடிக்கையாக பள்ளி தலைமை ஆசிரியரை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அரசு பள்ளியில் ஆன்மிக பேச்சாளர் சர்ச்சை பேச்சு: முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஸ் எதிர்ப்பு

இதுகுறித்து தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் வெளியிட்டுள்ள பணியிட மாற்ற அறிவிப்பில்,

சென்னை மாவட்டம், அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தலைமையசிரியராக பணிபுரிந்து வரும் ஆர்.தமிழரசி என்பவர் காலியாக உள்ள திருவள்ளூர் மாவட்டம், கோவில்பதாகை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நிர்வாக மாறுதல் வழங்கி ஆணையிடப்படுகிறது.

மேற்காணும் தலைமை ஆசிரியர் பணிவிடுப்பு செய்யும்போது அவர் பணிபுரியும் பள்ளியில் தலைமை ஆசிரியர் பணிகள் பாதிக்காதவாறு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சென்னை முதன்மைக் கல்வி அலுவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இந்திய வளா்ச்சியில் பங்கேற்க வேண்டும்: சா்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு

பிகாா்: புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்தது

பஞ்சாப் அமைச்சரவை மாற்றம்: 4 போ் நீக்கம்; 5 பேருக்கு பதவி