அஜித் தோவல், பிரதமரின் முதன்மை செயலர் பதவிக்காலம் நீட்டிப்பு…

தேசிய பாதுகாப்பு ஆலோசகர், பிரதமரின் முதன்மை செயலர் பதவிக்காலம் நீட்டிப்பு… ஒப்புதல் வழங்கியது அமைச்சரவை!

அஜித் தோவல் – பி.கே. மிஷ்ரா

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பிரதமரின் முதன்மைச் செயலாளர் பி.கே.மிஸ்ரா ஆகியோரின் பதவிக்காலத்தை நீட்டித்து பணி நியமனங்களுக்கான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

2014-ஆம் ஆண்டில் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அதே ஆண்டின் மே 30ஆம் தேதி அஜித் தோவல் நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் 2019-ஆம் ஆண்டில் நீட்டிக்கப்பட்டது.

தற்போது மோடி தலைமையிலான அரசு மீண்டும் பதவியேற்றுள்ள நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் பதவிக்காலம், மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல, பிரதமரின் முதன்மைச் செயலாளராக 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி நியமிக்கப்பட்ட பி.கே.மிஸ்ராவின் பதவிக்காலமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்இதையும் படிங்க – பிரதமரான பின்னர் முதல் வெளிநாட்டு பயணம்… ஜி7 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி செல்கிறார் மோடி!

இந்த இருவரின் பணி நீட்டிப்புக்கும் பணி நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதில், பிரதமரின் பதவிக்காலம் வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை இந்த பணி நீட்டிப்பு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க – “திருப்பதி தேவஸ்தானத்தில் முறைகேடு செய்தால் தண்டனை உறுதி” – சந்திரபாபு நாயுடு சூளுரை!விளம்பரம்

இதேபோல, பிரதமரின் ஆலோசகர்களாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகளான அமித் காரே, தருண் கபூர் ஆகியோர் நீடிப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Cabinet
,
PM Modi

Related posts

லட்டு பிரசாதத்தின் புனிதத்தை மீட்டெடுத்து விட்டோம் – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி லட்டு தரத்தில் சமரசம் கிடையாது: திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி லட்டு விவகாரம்: பா.ஜ.க. – சந்திரபாபு நாயுடு கூட்டணியில் உரசலா..?