அடுத்த படம் எது? அப்டேட் கொடுத்த சிம்பு!

நடிகர் சிம்பு தன் அடுத்த படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.

நடிகர் சிம்புவிற்கு மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என ஹாட்ரிக் ஹிட் அடித்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் 48வது படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தினை தேசிங்கு பெரியசாமி இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், இன்னும் படப்பிடிப்பு துவங்கவில்லை.

இதற்கிடையே, இயக்குநர் மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்தில் சிம்பு இணைந்தார். படப்பிடிப்பும் சமீபத்தில் முடிவடைந்தது.

இதையும் படிக்க: வேட்டையன்: நீக்கப்பட்ட காட்சிகள் வெளியீடு!

இந்த நிலையில், தற்போது சிம்பு எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ”தம் + மன்மதன் + வல்லவன் + விண்ணைத்தாண்டி வருவாயா இணைந்த ஜென் இசட் (gen z 1995 – 2010க்குள் பிறந்தவர்கள்) கதைதான் நம்ம அடுத்த திரைப்படம்” எனத் தெரிவித்துள்ளார்.

Dum + Manmadhan + Vallavan + Vtv
in Gen Z mode = NAMBA NEXT !!! ❤️‍

— Silambarasan TR (@SilambarasanTR_) October 19, 2024

இதனால், இன்றைய கால இளைஞர்களின் காதலைப் பேசும் படத்தில் சிம்பு நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. இயக்குநர் யார் என்கிற குறித்த தகவல் எதுவும் இல்லை. அதேநேரம், தேசிங்கு பெரியசாமி படம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது.

Related posts

UP: BJP Corporator’s Son Marries Pakistan Woman In Online Nikah Ceremony In Jaunpur; Party MLC Attends Function

5 Essential Albums by Indian Guitarists You Need To Hear

Unlock Your Mind : When Chess Meets Visualisation, Math And Logic