அடுத்த 3 மணிநேரத்துக்கு 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களுக்கு இன்றிரவு 7 மணிவரை கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

மேலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்பட 10 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இன்றிரவு 7 மணிவரை விழுப்புரம், கடலூர், தர்மபுரி, சேலம், பெரம்பலூர், நாமக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, நீலகிரி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் தேனி மாவட்டங்களுக்கும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : 3 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!

தீவிர புயல் சின்னம்

வங்கக் கடலில் அந்தமான கடல் பகுதகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அக். 22 காலை மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அக். 23-ம் தேதி புயலாக வலுபெறக்கூடும். அதன்பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து அக். 24-ல் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒடிசா-மேற்கு வங்க கடற்கரை பகுதிகளை அடையக்கூடும்.

தொடர்ந்து, புரி மற்றும் சாகர் தீவுகள் இடையே அக். 25 அதிகாலை தீவிர புயலாக வலுப்பெற்று கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : தீவிர புயலாக கரையைக் கடக்கும் ‘டானா’: வானிலை மையம்

Related posts

காஸாவில் தற்காலிக போர்நிறுத்தம்?

தொண்டர்களைப் பார்த்து கண்கலங்கிய விஜய்!

அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் மன்னித்து விடுங்கள்: முகமது ஷமி