அடுத்த 3 மணிநேரத்துக்கு 24 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 24 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திருப்பூர், கோவை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, காரைக்கால், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, சேலம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

pic.twitter.com/Gzy93lCd5C

— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) October 13, 2024

முன்கூட்டியே வடகிழக்கு பருவமழை

வடகிழக்கு பருவமழை அக். 15 ஆம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி பருவமழை தொடங்கிய நிலையில், இந்த ஆண்டில் முன்கூட்டியே தொடங்கவுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தின் உள் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 4 தினங்களுக்கான அநேகமான இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே அறிவித்திருந்தது.

இதையும் படிக்க | அக். 16ல் சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

அதன்படி, அடுத்த 3 மணிநேரத்துக்கு தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது