அடுத்த 3 மணி நேரத்திற்கு எந்தெந்த மாவட்டங்களில் மழை?

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று இரவு முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்து போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இன்று இரவு முதல் அதி கனமழை இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட்!

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது மேலும், மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதற்கடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகம் – புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

இதையும் படிக்க | சென்னை, 3 மாவட்டங்களுக்கு நாளை (அக்.16) அரசு விடுமுறை! அத்தியாவசிய சேவைகள் இயங்கும்!

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு (இரவு 7 மணி வரை) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையும்

ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், தஞ்சாவூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்

கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

35 செ.மீ., கடந்தது! மழைப்பொழிவில் கடப்பாக்கம் புதிய சாதனை

Raveena Tandon Says Mob Attacked Richa Chadha In Mumbai A Day After Assaulting Her: ‘She Had To Pay Up’

Punjab: Over 6 Injured In 2 Firing Incidents During Panchayat Polls