அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஒடிஸா கடற்கரை அருகே நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி (புயல்சின்னம்) ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுபெற்றது.

இது ஒடிஸா, மேற்கு வங்க மாநிலங்களுக்கு இடையே கரையைக் கடந்துவிட்டதாக இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

pic.twitter.com/Fj8A8cKoy4

— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) September 9, 2024

இது, மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று நள்ளிரவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறையக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்துக்கு (இரவு 10 மணி வரை) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்