அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 25 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று(அக். 22) மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதையும் படிக்க: டானா புயல்: 28 ரயில்கள் ரத்து!

pic.twitter.com/SZGcaFoXj1

— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) October 22, 2024

இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்துக்கு (இரவு 10 மணி வரை) கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தருமபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

காஸாவில் தற்காலிக போர்நிறுத்தம்?

தொண்டர்களைப் பார்த்து கண்கலங்கிய விஜய்!

அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் மன்னித்து விடுங்கள்: முகமது ஷமி