அடேங்கப்பா… ஒரு காளை மாடு இத்தனை லட்சமா…?

அடேங்கப்பா… ஒரு காளை மாடு இத்தனை லட்சமா…?

காரை விட அதிக விலைக்கு விற்பனையான காளை

விவசாயிகளுக்கு நண்பனாக இருக்கும் காளைகள் என்ன விலைக்கு விற்கப்படும் என நினைக்கிறீர்கள்? சில காளைகள் 1 முதல் 1.5 லட்சம் ரூபாய் வரையில் விற்கப்படுகிறது.

இன்னொரு புறம் பார்த்தோமென்றால், கர்நாடகா மாநிலத்தின் விஜயபுரா மாவட்டத்தில் காளை ஒன்று அதிக விலைக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. மாட்டு வண்டிப் பந்தயத்தில் வென்று சாதித்த ஹிந்துஸ்தான் ஹெச்பி என்ற பெயர் கொண்ட காளை மாடு ஒன்று தற்போது காரை விட அதிக விலைக்கு விற்பனையாகி உள்ள செய்தி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விளம்பரம்

விஜயபுரா மாவட்டத்தின் பாபலேஷ்வர் தாலுக்காவில் உள்ள ஹோலே பாபலாடி கிராமத்தைச் சேர்ந்த சித்னா கவுடா பாட்டீல் என்பவரது 6 வயது காளை ரூ.18 லட்சத்து விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு பெலகாவி மாவட்டம் ராயபாகா தாலுக்காவில் உள்ள இட்னாலா கிராமத்தைச் சேர்ந்த சதாசிவ டாங்கே என்ற விவசாயி 18 லட்சம் ரூபாய்க்கு இந்த காளையை வாங்கினார். இந்த காளையை பற்றி முன்பே அறிந்த சதாசிவ டாங்கே, எப்படியாவது இதை வாங்கியே ஆக வேண்டும் என்ற ஆர்வத்தில் 18 லட்சம் ரூபாயை இந்த காளைக்காக செலவு செய்துள்ளார்.

விளம்பரம்

இதையும் படிங்க: மகளிர் உரிமைத் தொகை பணத்துக்குக் கூடுதல் வட்டி… பெண்களுக்கான சூப்பர் சேமிப்புத் திட்டம்..?

பலாடியைச் சேர்ந்த சித்தன் கவுடா பாட்டீல் ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் செலவு செய்து வாங்கிய இந்த காளையை, இந்துஸ்தான் ஹெச்பி என அன்புடன் பெயரிட்டு, ரூ.18 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார். இவர் இந்த காளையை தனது சொந்த மகன் போலவே வளர்த்து வந்துள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன், விஜயபுரா மாவட்டத்தில் உள்ள கோர்ட்டி கோல்ஹாரா என்பவரிடம், ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் கொடுத்து இந்த காளையை வாங்கினார் சித்தாங்க கவுடா.

விளம்பரம்

காளையை வாங்கிய மூன்றே ஆண்டுகளில், ரூ.18 லட்சத்திற்கு விற்பனை ஆகியுள்ளதை பெரிய சாதனையாகவே கருத வேண்டும். தொடர்ந்து பல பரிசுகளை வென்ற இந்த காளை மாட்டு வண்டிப் போட்டியிலும் கலந்து கொண்டு அபார வெற்றி பெற்றது.

மூன்று ஆண்டுகளுக்கு முன் காளையை வாங்கிய சித்தனகவுடா, அதற்கு ஒரு மாதம் பயிற்சி அளித்து போட்டிகளுக்கு அழைத்துச் சென்று வந்தார். சமீபத்தில் பாகல்கோட் மாவட்டம் முதோலா தாலுகாவில் உள்ள முத்தாபூர் கிராமத்தில் நடந்த தேரே பந்தே என்னும் போட்டியில் முதல்முறையாக 2வது இடம் வென்று ரூ.20,000 பரிசு பெற்றது. அதன்பிறகு நூற்றுக்கணக்கான போட்டிகளில் கலந்து கொண்டு வரிசையாக பரிசுகளை வென்றுள்ளது.

விளம்பரம்

இதையும் படிங்க: நீலகிரியில் படுகர் மக்களின் பாரம்பரியத் திருவிழா… சிறப்பாக நடைபெற்ற தெவ்வஹப்பா வழிபாடு…

கர்நாடகா மாநிலத்திலும் வெளி மாநிலங்களில் நடைபெறும் பல்வேறு போட்டிகளில் தொடர்ந்து தனது முத்திரையை பதித்து வந்தது ஹிந்துஸ்தான் ஹெச்பி காளை. இந்த காளை பந்தயத்தில் இருந்தால், மற்ற காளைகளின் உரிமையாளர்கள் எல்லாம் பீதியடைவார்கள். போட்டி என்று வந்துவிட்டால் ஹிந்துஸ்தான் ஹெச்பி காளையின் அருகில் யாருமே நிற்க முடியாது. அண்டை மாநிலமான மகாராஷ்டிராவின் சங்கலி மாவட்டத்தில் உள்ள பாகல்கோட் மற்றும் யாத்கிரி, பெல்காம், விஜயபுரா, ஜட்டா உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்ற போட்டியில் ஹிந்துஸ்தான் ஹெச்பி கலந்து கொண்டுள்ளது. இதுவரை 3 பைக்குகள், 40 கிராம் தங்கம், 2 வெள்ளிக் கேடயம், ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான பரிசுகளை இந்த காளை வென்றுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
bull
,
Business
,
Karnataka
,
Local News

Related posts

2016 ஜூன் 15 கொல்லம் கலெக்டர் அலுவலக குண்டு வெடிப்பு: மதுரையை சேர்ந்த மூவர் குற்றவாளிகள்

ஆன்லைனில் கட்டிட அனுமதியை விரைவாக வழங்க வழிகாட்டுதல்: 30 நாளில் உத்தேச தடையின்மை சான்று

ரூ.158 கோடியில் தொழில்நுட்ப கட்டிடம்: கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்