அண்ணனின் திருமணத்தில் கலந்துகொள்ளாத கங்குலி… காரணம் தெரியுமா..?

அண்ணனின் திருமணத்தில் கலந்துகொள்ளாத கங்குலி… காரணம் தெரியுமா..?

அண்ணனின் திருமணத்தில் கலந்துகொள்ளாத கங்குலி… காரணம் தெரியுமா..?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் மூத்த சகோதரரும், வங்காள கிரிக்கெட் சங்கத்தின் (CAB) தலைவருமான சினேஷிஸ் கங்குலி திருமணம் செய்து கொண்டார். ஞாயிற்றுக்கிழமை அன்று தனது வாழ்க்கையின் புதிய இன்னிங்ஸைத் தொடங்கியுள்ள சினேகாஷியின் இரண்டாவது மனைவியின் பெயர் அர்பிதா சாட்டர்ஜி.

ஞாயிற்றுக்கிழமை அன்று சினேகாஷிஸ் – அர்பிதா இருவரும் அவர்கள் வசித்து வரும் குடியிருப்பிலேயே திருமணத்தை பதிவு செய்ததோடு மாலையும் மாற்றிக்கொண்டனர். இருவரது நெருங்கிய நண்பர்கள் மட்டும் திருமணத்தில் கலந்து கொண்டனர். முக்கியமாக வைஷாலி டால்மியாவும் உடனிருந்தார். ஆனால், மணமக்களின் குடும்பத்தினர் யாரும் வரவில்லை எனத் தெரிகிறது. சினேகாஷியின் தாயார் நிருபா கங்கோபாத்யாய் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். அவருக்கு இதயத்தில் ஸ்டென்ட் பொறுத்தப்பட்டுள்ளது.

விளம்பரம்

சமீபத்தில் சவுரவ் கங்குலியும் அவரது மனைவி டோனாவும் தங்கள் மகள் சனாவை பார்ப்பதற்காக லண்டன் சென்றிருந்தனர். சவுரவ் தற்போது லண்டனில் இருக்கும் நிலையில், டோனா கொல்கத்தாவிற்கு வந்துவிட்டார். ஆனால் சினேகாஷிஸ் திருமணத்தில் டோனா கலந்து கொண்டதாக தெரியவில்லை. இதற்கிடையில், சவுரவ் இன்னும் சில நாட்கள் லண்டனில் தங்கியிருந்துவிட்டு, அடுத்த வாரத்தில் தான் கொல்கத்தா திரும்ப உள்ளார். இதனால் தான் சவுரவ் கங்குலி – டோனா இருவரையும் திருமணத்தில் பார்க்க முடியவில்லை என நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

விளம்பரம்

இதையும் படிங்க: அடங்காத அசுரனாக வந்த ராயன்… திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாட்டம்…

சினேகாஷிக்கும் அர்பிதாவுக்கும் ஞாயிற்றுக்கிழமை சட்டப்படி திருமணம் நடந்தது. சினேகாஷின் நெருங்கிய நண்பரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான சஞ்சய் தாஸ், சினேகாஷிஸ் தரப்பில் சாட்சியாக கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சஞ்சய் தான் சவுரவ் கங்குகுலியின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக தயாரிக்கும் முயற்சியில் பின்னால் இருந்து வருகிறார்.

ஜூலை 21ஆம் தேதி திருமணம் முடிந்தாலும், ஆகஸ்ட் 7ஆம் தேதி தான் திருமண வரவேற்பு நடைபெறப் போகிறது. புறவழிச்சாலையில் உள்ள சொகுசு விடுதியில் இவர்களது வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. திருமண அழைப்பிதழில் சவுரவ்-டோனாவின் பெயர் இருந்தாலும், இந்நிகழ்ச்சியில் அவர்கள் இருவரும் கலந்துகொள்வார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

விளம்பரம்

திருமண நாளில், புதுமணத் தம்பதிகள் இருவரும் ஒருவருக்கொருவர் பொருத்தமான ஆடைகளை அணிந்திருந்தனர். மஞ்சள் நிற பஞ்சாபி மற்றும் வெள்ளை பைஜாமாவில் சினேகாஷிஸ் காணப்பட்டார். அர்பிதா மஞ்சள் நிற புடவை அணிந்திருந்தார். இவர்கள் இருவரும் பல வருடங்களாக ஒரே குடியிருப்பில் வசித்து வருவதாகத் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: புதிய வரி விதிப்பின் கீழ் ரூ.17,500 வரை சேமிக்கலாம் .. எப்படித் தெரியுமா..?

சினேகாஷியின் முன்னாள் மனைவி மாம் கங்குலி ஒரு பிரபலமான நடனக் கலைஞர் ஆவார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. சினேகாஷிஸ்-மாம் தம்பதியினரின் மகள் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். மாம்வுடனான திருமண வாழ்க்கையிலிருந்து சட்டப்படி விவாகரத்து பெற்ற பிறகு அர்பிதாவை திருமணம் செய்து கொள்ள சினேகாஷிஸ் முடிவு செய்தார். மறுபுறம் அர்பிதாவும் விவாகரத்து பெற்றவரே. கல்கத்தாவைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரை இவர் முதல் திருமணம் செய்திருந்தார். தற்போது கடந்த காலத்தை ஒதுக்கிவிட்டு சினேகாஷியும் அர்பிதாவும் தங்கள் புதிய வாழ்க்கையை சந்தோஷமாக தொடங்கியுள்ளனர்.

விளம்பரம்

59 வயதான சினேகாஷிக்கும் 47 வயதான அர்பிதாவுக்கும் இடையே நீண்ட நாட்களாக காதல் இருந்து வருகிறது. இந்த உறவு குறித்து இரு தரப்பினரும் எந்தவித ரகசியமும் இல்லாமல் வெளிப்படையாகவே இருந்தனர். சினேகாஷிஸின் தற்போதைய மனைவி, ஒருகாலத்தில் அஜந்தா ஃபூட்வேர் உரிமையாளரின் மனைவியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
cricket
,
Local News
,
Sourav Ganguly

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்