அண்ணா என்றழைத்த சாய் பல்லவி..! கடுப்பான சிவகார்த்திகேயன்!

தென்னிந்தியாவின் பிரபலமான நடிகையாக இருப்பவர் சாய் பல்லவி. தமிழ் மற்றும் தெலுங்கில் அவருக்கென தனி ரசிகர் பட்டாளங்களே இருக்கின்றன.

குறிப்பாக, மலையாளத்தில் அவர் நடித்த பிரேமம் திரைப்படத்திற்கு தென்னிந்தியா முழுவதும் நல்ல பெயர் இருப்பது குறிப்பிடத்தக்கது.

நடனத்திற்கென அவருக்கு தெலுங்கில் பல படங்கள் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றன. தண்டேல் (தெலுங்கு) எனும் படத்தில் நடித்து வருகிறார்.

கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அமரன் படத்தில் நடித்திருக்கிறார். சாய் பல்லவி நாயகியாக நடித்துள்ளார்.

இதையும் படிக்க:ஆர்ஜே பாலாஜியின் சொர்கவாசல்..! முதல் பார்வை போஸ்டர்!

அக்.31 ஆம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன் சாய் பல்லவி குறித்து பேசியதாவது:

நிவின்பாலி படம் பார்க்க சென்றேன். அப்போது ஒரு கதாபாத்திரம் திரையில் தோன்றுகிறது. திரையரங்கில் அனைவரும் எழுந்துநின்று மலர் டீச்சர் என்று கத்தினார்கள். பொதுவாக டீச்சர் என்றாலே மாணவர்கள் தெரித்து ஓடுவார்கள். ஆனால், முதன்முறையாக மலர் டீச்சருக்குதான் இவ்வளவு ஆச்சரியமடைந்தார்கள் என நினைக்கிறேன்.

பிரேமம் படம் பார்த்து முடித்தபிறகு நானும் மலர் டீச்சர் ரசிகன் ஆனேன். பின்னர் எப்படியோ அவரது எண்ணை வாங்கி அவரை அழைத்தேன். ’மலர் டீச்சராக சூப்பராக நடித்துள்ளீர்கள். அறிமுகக் காட்சியும் கிளைமேஷும் சூப்பர்’ என்று கூறினேன். உடனே சாய் பல்லவி, ‘அண்ணா மிகவும் நன்றி அண்ணா. நீங்கள் கூறியது மிகப்பெரியது அண்ணா…’ என்று பேச ஆரம்பித்தார்.

இதையும் படிக்க: லியோ ஓராண்டு நிறைவு..! லோகேஷ் கனகராஜ் கூறியதென்ன?

எனக்கு கடுப்பாகிவிட்டது. நிறுத்துமா என்று கூறி நான் மலர் டீச்சரிடம் பேசுவதுபோல பேசுகிறேன். நீங்கள் ஏன் சாய் பல்லவி மாதிரி பேசுகிறீர்கள் என்றேன். படத்தில் வருவதுபோல என்னை மறந்தாலும் பரவாயில்லை, ஆனால் அண்ணா என்று மட்டும் அழைக்காதே. நாமும் எப்போதாவது ஒன்றாக இணைந்து படம் பண்ணுவோம் என்றேன். இப்போது அது நிறைவேறியுள்ளது.

இந்தக் காலகட்டத்தில் சாய் பல்லவி தன்னை ஒரு நடிகையாக நட்சத்திரமாக உயர்த்திக்கொண்டார். நல்ல கதைகளை தேர்வுசெய்து நடிக்கிறார். சாய் பல்லவி என்பது ஒரு பிராண்ட் என்றார்.

Related posts

Chinu Kwatra’s dream to make India a developed and happy nation

Tata Soulfull Is Bringing Ancient Superfood Millets To Consumers In Modern Formats

Celebrating Diwali With Social Harmony, Innovation And Creativity