அண்ணா பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் மரியாதை!

முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு, அவரது படத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும், எக்ஸ் தளப் பதிவில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்ததாவது:

75 ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக் கழகம் இந்தச் சமூகத்தில் மாற்றங்கள் பல ஏற்படுத்தி, தலைசிறந்த தமிழ்நாடாக நாம் தலைநிமிர்ந்து நடைபோட வித்திட்டவர் நம் பேரறிஞர் அண்ணா!

தலைவர் கலைஞர் அவர்கள் தன் இறுதி மூச்சிலும் “அண்ணா… அண்ணா…” என்றே பேசினார்; எழுதினார்.

அத்தகைய உணர்வுப்பூர்வமான தம்பிமார்களைப் பெற்ற ஒப்பற்ற பெருமகன்! ஒரு இனத்தின் அரசாகச் செயல்பட நம்மை ஆளாக்கிய பேரறிஞர் பெருந்தகை அண்ணாவைப் போற்றி வணங்குகிறேன்! என்று தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம்: அண்ணா நினைவு இல்லத்தில் அமைச்சர், ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை

அதிமுக பொதுச் செயலரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “இந்திய நாட்டின் மாநில அரசியல் களங்களில் இன்றுவரை தமிழ்நாடு தனித்துவமாகத் திகழக் காரணம் நம் யுகத்திற்கான அரசியல் பாதையை வகுத்துத் தந்த அரசியல் பேராசான் அண்ணா அவர்கள் தான் என்றால் மிகையாகாது.

"தமிழ்நாடு" என்ற பெருமிதத்தோடு சொல்லும் போதெல்லாம் நம் நினைவில் வரும் திராவிட இயக்கத்தின் கொள்கை தீபம் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்தநாளில், சமத்துவ சமுதாயம் காண அண்ணாவழியில்அஇஅதிமுக ஓயாது உழைக்க உறுதியேற்போம். அண்ணா நாமம் வாழ்க!” என்று தெரிவித்துள்ளார்.

Related posts

வன்முறையைத் தவிர்த்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்: கிரண் ரிஜிஜு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜானி மாஸ்டர்!

பொது சொத்துக்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் துரைமுருகன்