அதிக எடை, ஒழுக்கமின்மை: மும்பை அணியில் இருந்து பிரித்வி ஷா நீக்கம்!

மும்பை அணியில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிரித்வி ஷா நீக்கப்பட்டுள்ளார்.

மும்பை அணியில் இருந்து பிரித்வி ஷா நீக்கப்பட்டதற்காக முழுமையான காரணம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. அவரது உடல் எடை மற்றும் போட்டிக்கு முந்தைய பயிற்சியில் சரியாக கலந்து கொள்ளாதது போன்றவை பயிற்சியாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணாமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க..: இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: வில்லியம்சன் விலகல்!

மும்பை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் சஞ்சய் பாட்டீல், ரவி தாக்கர், ஜீத்தேந்தர தாக்கரே, கிரன் பவார், விக்ராந்த் எலிகேட்டி ஆகியோர் கொண்ட குழு பிரித்வி ஷாவை ரஞ்சி கோப்பையில் கடைசியில் போட்டியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்வி ஷாவின் தற்போதைய ஃபார்ம் மற்றும் உடல் எடை மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கத்தின் மிகப்பெரிய தலைவலியாக உள்ளது. இதனால், அணியில் இருந்து பிரித்வி ஷாவை நீக்கி அவருக்கு பாடம் கற்பிக்க அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

இதையும் படிக்க..:ஆண் குழந்தைக்கு தந்தையானார் சர்ஃப்ராஸ் கான்!

போட்டிக்கு முந்தைய வலைப்பயிற்சிகளில் பிரித்வி ஷா சரியாக கலந்து கொள்ளவில்லை என்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும், அவரது உடற்தகுதியும் அணித் தேர்வர்கள் மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது.

மூத்த கிரிக்கெட் வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர், அஜிங்கியா ரஹானே, ஷர்துல் தாக்குர் போன்றவர்கள்கூட வலைப் பயிற்சியில் முறையாக கலந்து கொள்ளும் நிலையில் பிரித்வி ஷா கலந்து கொள்ளாதது மேலும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்வி ஷாவை நீக்குவது நிர்வாகம் மற்றும் அணித் தேர்வர்களில் கோரிக்கை மட்டுமல்ல. பயிற்சியாளர் மற்றும் அணியின் கேப்டனும் சேர்ந்து பிரித்வி ஷாவை அணியில் இருந்து நீக்க முடிவுசெய்துள்ளனர்.

இதையும் படிக்க..: ஆஸி. முதல்தரப் போட்டி: ருதுராஜ் தலைமையிலான இந்தியா ஏ அணி அறிவிப்பு!

பிரித்வி ஷா தனது 18 வயதில் அறிமுகமானபோது அடுத்த சச்சின் டெண்டுல்கர் என்று வர்ணிக்கப்பட்டார். அவர் 2018 ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். அதன்பின்னர் அணியில் இருந்து கலட்டிவிடப்பட்டார்.

இந்த ரஞ்சிக் கோப்பையில் பரோடா அணிக்கு எதிராக இரண்டு இன்னிங்ஸில் முறையே 7 மற்றும் 12 ரன்களும், மகாராஷ்டிர அணிக்கு எதிராக இரண்டு இன்னிங்ஸில் முறையே 1 மற்றும் 39 ரன்கள் எடுத்திருந்தார்.

இதையும் படிக்க..: லாரன்ஸ் பிஷ்னோயை சுட்டுக் கொல்பவருக்கு ரூ.1 கோடி பரிசு! -கர்னி சேனை அறிவிப்பு

Related posts

காஸாவில் தற்காலிக போர்நிறுத்தம்?

தொண்டர்களைப் பார்த்து கண்கலங்கிய விஜய்!

அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் மன்னித்து விடுங்கள்: முகமது ஷமி