மக்கள்தொகை சரிந்து வருவதால், அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ள தம்பதிகளை ஊக்குவிக்கும்வகையில் புதிய சலுகைகளை சீனா அறிவித்துள்ளது.
பீஜிங்,
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் இந்தியாவும் இரண்டவது இடத்தில் சீனாவும் உள்ளன. முதல் இடத்தில் இருந்து வந்த சீனாவில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. ஒரு குழந்தை மற்றுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இந்தக் கட்டுப்பாட்டின் விளைவாக மக்கள் தொகை வேகமாக சரிந்தது.
இதனால், கடந்த 2016-ம் ஆண்டு அந்த கொள்கையை சீனா ரத்து செய்தது. தற்போது சீனாவில் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளளாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அங்கு குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால், குழந்தை பிறப்பு சரிவை கட்டுப்படுத்தி, மக்கள்தொகையை அதிகரிக்க சீனா பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. சீன மந்திரிசபை இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதிக குழந்தைகளை தம்பதிகளை ஊக்குவிக்கும்வகையில், அவர்களுக்கு 13 சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குழந்தைப்பேறு மானியம் அறிமுகப்படுத்தப்படுகிறது. வீட்டு வசதி, கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை தொடர்பான சலுகைகள், வருமானவரி சலுகைகள் இடம்பெற்றுள்ளன.