அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வானதை கொண்டாடும் விழா: ஏ.ஆர்.ரஹ்மான் இசைக் கச்சேரி

அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வானதை கொண்டாடும் விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

அமெரிக்க அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதை கொண்டாடும் விதமாக, ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நேரடியான இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இந்திய-அமெரிக்கன் நிதி திரட்டும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆசிய-அமெரிக்க, பசிபிக் தீவுவாசிகளின் வெற்றி அமைப்பு, அடுத்தமாதம் இந்த நிகழ்ச்சி நடைபெறுவதாகவும், நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான், கமலா ஹாரிஸ் கலந்து கொள்வார்கள் என்றும் உலகத் தரமான இசைக் கச்சேரி நேரடியாக உங்கள் வீடுகளுக்கே ஒளிபரப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த இசைக் கச்சேரி குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தனது சமூக வலைதளங்களில் எந்தப் பதிவையும் பகிரவில்லை.

COMING SOON: A Very Special Evening with A. R. RAHMAN!
Join @arrahman to celebrate the historic candidacy of Kamala Harris for President with a world-class live music concert streamed straight to your home. Sign up to see #ARRahman at https://t.co/yES0GmrS0Cpic.twitter.com/abf8fWbcWx

— AAPI Victory Fund (@AAPIVictoryFund) October 10, 2024

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆசிய-அமெரிக்க, பசிபிக் தீவுவாசிகளின் வெற்றி அமைப்பு, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு தனது ஆதரவை அளித்துள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போட்டியில் இருந்து விலகியதையடுத்து அமெரிக்க துணை அதிபரான கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், அமெரிக்கர் மத்தியில் கமலா ஹாரிஸுக்கு டிரம்பைவிட அதிக ஆதரவு கிடைத்துள்ளது.

Related posts

இரிடியம் தருவதாக ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2 கோடி மோசடி: 4 போ் கைது

முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி!

சர்ஃபராஸ் கான் சதம்..! மழையினால் பெங்களூரு டெஸ்ட் போட்டி பாதிப்பு!