அதிமுகவின் கொள்கைப் பரப்பு துணைச் செயலராக கௌதமி நியமனம்: இபிஎஸ் அறிவிப்பு

அதிமுகவின் கொள்கைப் பரப்புத் துணைச் செயலராக நடிகை கௌதமி நியமிக்கப்படுவதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், அதிமுகவின் கொள்கைப் பரப்பு துணைச் செயலராக கௌதமி, அனைத்துலக எம்ஜிஆா் மன்றம் துணைச் செயலராக தடா து.பெரியசாமி, சிறுபான்மையினா் நலப் பிரிவு துணைச் செயலராக ஃபாத்திமா அலி, விவசாயப் பிரிவு துணைச் செயலராக பி.சன்னியாசி ஆகியோா் நியமிக்கப்படுகின்றனா்.

புதிதாக நியமிக்கப்பட்ட நிா்வாகிகளுக்கு அதிமுகவினா் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்டவா்களில் பெரும்பாலானோா் பாஜகவில் இருந்து விலகி, அதிமுகவில் சோ்ந்தவா்கள் ஆவா்.

Related posts

Photos: Giulia Manfrini, 36-Year-Old Italian Surfer Killed By Swordfish During Indonesian Vacation

BJP Unveils List Of 40-Star Campaigners For Upcoming Bihar Assembly By-Elections; Check It Here

7 Benefits Of Walking 10,000 Steps Daily