அதிமுக – பாஜக இடையே மீண்டும் கூட்டணி ஏற்பட்டால் மகிழ்ச்சி: நயினார் நாகேந்திரன்

திருநெல்வேலி: அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் இணைந்தால் மகிழ்ச்சி எனவும், நடிகர் விஜய்யை பார்த்து ஆளும் கட்சி அஞ்சுகிறது என பாஜக சட்டப்பேரவை குழு தலைவா் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

நயினாா் நாகேந்திரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அதிமுக – பாஜக இடையே மீண்டும் கூட்டணி ஏற்பட்டால் மகிழ்ச்சி தான். அதிமுகவில் பெரும் பதவியில் இருந்துவிட்டு பாஜகவில் இணைந்தேன். எனக்கு கட்சி பதவி முக்கியம் இல்லை. சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை துறந்துவிட்டு பாஜகவில் இணைந்த விஜயதாரணிக்கு பதவி கொடுத்திருக்க வேண்டும். வரும் காலத்தில் அவருக்கு நிச்சயம் உரிய பதவி கிடைக்கும்.

பாராலிம்பிக் வீராங்கனைகளை பாராட்டிய உதயநிதி!

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை. தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி வாசல்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் புழக்கம் அதிகரித்துள்ளன. நாள்தோறும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள் நடைபெறுகின்றன.

முதல்வர் வெளிநாட்டில் இருந்தாலும் தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் நடிகர் விஜயை பார்த்து ஆளுங்கட்சி அஞ்சுகிறது. யாா் காட்சி தொடங்கினாலும், அவா்கள் மாநாடு நடத்துவதற்கு அனுமதி கொடுக்க வேண்டும். விஜய் மாநாட்டிற்கு அனுமதி வழங்கினால் எந்த பிரச்னையும் இல்லை. கட்சி மாநாட்டிற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் கூறினார்.

Related posts

இந்திய வளா்ச்சியில் பங்கேற்க வேண்டும்: சா்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு

பிகாா்: புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்தது

பஞ்சாப் அமைச்சரவை மாற்றம்: 4 போ் நீக்கம்; 5 பேருக்கு பதவி