அதிவேகமாக இரட்டை சதம் விளாசி இந்திய வீராங்கனை சாதனை!

அதிவேகமாக இரட்டை சதம் விளாசி இந்திய வீராங்கனை சாதனை!டெஸ்ட் போட்டிகளில் அதிகவேகமாக இரட்டை சதம் விளாசி இந்திய அணியின் ஷபாலி வெர்மா சாதனை படைத்துள்ளார்.ஷபாலி வெர்மாபடம் | பிசிசிஐ

டெஸ்ட் போட்டிகளில் அதிகவேகமாக இரட்டை சதம் விளாசி இந்திய அணியின் ஷபாலி வெர்மா சாதனை படைத்துள்ளார்.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி இன்று (ஜூன் 28) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 525 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க வீராங்கனை ஷபாலி வெர்மா இரட்டை சதம் விளாசி அசத்தினார். இதன்மூலம், மகளிர் கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக இரட்டை சதம் விளாசிய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார் ஷபாலி வெர்மா. அவர் 194 பந்துகளில் இரட்டை சதம் விளாசி அசத்தினார்.

இதற்கு முன்னதாக, ஆஸ்திரேலிய வீராங்கனை அனபெல் சதர்லேண்ட் 248 பந்துகளில் இரட்டை சதம் விளாசியதே அதிவேக இரட்டை சதமாக இருந்தது. அனபெல் சதர்லேண்டின் இந்த சாதனையை ஷபாலி வெர்மா முறியடித்துள்ளார்.

ஷபாலி வெர்மா 197 பந்துகளில் 205 ரன்கள் (23 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள்) எடுத்து ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

திருப்பதி லட்டு விவகாரம்; சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்ய முடிவு

சந்திரபாபு நாயுடு கடவுளிடமே அரசியல் செய்கிறார் – ரோஜா

‘கோவில்களின் நிர்வாகம் பக்தியுள்ள இந்துக்களிடம் இருக்க வேண்டும்’ – சத்குரு ஜக்கி வாசுதேவ்