அத்திக்கடவு -அவிநாசி திட்டம் வரலாற்று சாதனை திட்டம்: எடப்பாடி பழனிசாமி

அத்திக்கடவு -அவிநாசி திட்டம் வரலாற்று சாதனை திட்டம் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சேலத்தில் அளித்த பேட்டியில், அத்திக்கடவு- அவிநாசி திட்டம் கொண்டு வர வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று நானே அடிக்கல் நாட்டி வைத்தேன். தேவையான நீர் குளம், குட்டைகளில் நிரப்ப ஜெயலலிதா அரசு முதற்கட்டமாக ரூபாய் ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி இருந்தது.

கரோனா காலத்தில் ஒரு ஆண்டு இந்த பணி தொய்வு ஏற்பட்டது. அப்போது 85 சதவீதம் பணி நிறைவடைந்து இருந்தது. மீதம் உள்ள பணிகள் முடிந்து தற்போது திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் வரலாற்று சாதனை திட்டம். ஏழை, எளிய விவசாய மக்களுக்கு இந்த திட்டம் மகிழ்ச்சி அளித்துள்ளது. போராட்டக் குழுவினர் நன்றியை தெரிவித்துள்ளனர்.

விஜய்யின் கடைசிப் படம்! இன்று மாலை அப்டேட்!

இந்த திட்டம் போல் 100 ஏரி திட்டம் நடந்து வருகிறது. நாங்கள் குரல் கொடுத்தால் நான்கு ஏரிகளுக்கு தண்ணீர் விடுகிறார்கள். மற்ற ஏரிகளுக்கும் தண்ணீர் விட வேண்டும். வேகமாக இந்த பணி நடக்க தேவையான நிதி ஒதுக்க வேண்டும்

அதிமுக கொண்டு வந்த திட்டம் என கருதாமல் நிதி ஒதுக்கி திட்டத்தை முடிக்க வேண்டும் என்றார்.

Related posts

வார விடுமுறை: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

த.வெ.க. மாநாடு: பணிகளை மேற்கொள்ள குழுக்கள் அமைக்க திட்டம்

கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு… பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தினால் ரூ.20 அபராதம்