அந்தகன் பாடலை வெளியிடும் விஜய்!

அந்தகன் பாடலை வெளியிடும் விஜய்!நடிகர் விஜய் அந்தகன் திரைப்படத்தின் முதல் பாடலை வெளியிடுகிறார்.

நடிகர் விஜய் அந்தகன் திரைப்படத்தின் முதல் பாடலை வெளியிடுகிறார்.

ஆயுஷ்மன் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடிப்பில் உருவான அந்தாதுன் திரைப்படம் ஹிந்தியில் 2018 அக்டோபர் மாதம் வெளியாகி, ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் பெற்றிருந்தார்.

பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய ஜேஜே பிரட்ரிக், அந்தாதுன் தமிழ் ரீமேக்கை இயக்குவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அவர் விலக, தியாகராஜனே இப்படத்தை இயக்கினார்.

அந்தகன் எனப் பெயரிடப்பட்ட இப்படத்தில் பிரசாந்த், சிம்ரன், ப்ரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி, யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ். ரவிகுமார், வனிதா விஜயகுமார் போன்றோர் நடித்துள்ளனர்.

சில ஆண்டுகளாக பல்வேறு பிரச்னைகளால் படம் வெளியாகமல் இருந்த நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் படம் வெளியாகுமென படக்குழு தெரிவித்திருந்தது. இதன் டிரைலர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில், அந்தகன் திரைப்படத்தின் முதல் பாடலை நடிகர் விஜய் வெளியிடுகிறார். அந்தகன் ஆந்தெம் (anthagan anthem) என்கிற இப்பாடலை இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி பாடியுள்ளனர்.

Related posts

போக்குவரத்து இணையதளம், செயலி மேம்பாடு: அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் 29-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற இந்திய அணிக்கு ஆளுநர், முதல்வர் வாழ்த்து