அந்நிய நிதி வரவால் மீண்ட சென்செக்ஸ், நிஃப்டி!

மும்பை: அமெரிக்க சந்தை சரிவிலிருந்து மீண்டதாலும், புதிய அந்நிய நிதி முதலீடுகள் அதிகரிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் இன்று தொடர்ந்து இரண்டாவது நாளாக உயர்வுடன் முடிவடைந்தன.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 361.75 புள்ளிகள் உயர்ந்து 81,921.29 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தக நேர முடிவில் 637.01 புள்ளிகள் உயர்ந்து 82,196.55 புள்ளிகளாக இருந்தது.

தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 104.70 புள்ளிகள் உயர்ந்து 25,041.10 புள்ளிகளாக நிலைபெற்றது.

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள 30 நிறுவனங்களில் என்டிபிசி, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், பார்தி ஏர்டெல், டெக் மஹிந்திரா, பவர் கிரிட், ஆக்சிஸ் வங்கி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து முடிந்தது. அதே வேளையில் பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், மஹிந்திரா மற்றும் மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட பங்குகள் சரிந்து முடிந்தது.

இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 361 புள்ளிகள் உயர்ந்து 81,921 ஆகவும் நிஃப்டி 104 புள்ளிகள் உயர்ந்து 25,041 ஆகவும் இருந்தது. இன்று 2,473 பங்குகள் ஏற்றத்திலும், 1,300 பங்குகள் சரிந்தும், 98 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமானது.

ஆசிய சந்தைகளில் ஷாங்காய் மற்றும் ஹாங்காங் உயர்ந்து முடந்த நிலையில், சியோல் மற்றும் டோக்கியோ சந்தைகள் சரிந்து முடிந்தது. ஐரோப்பிய சந்தைகள் ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாயின. அமெரிக்க பங்குச் சந்தைகள் நேற்று (திங்கள்கிழமை) கணிசமாக உயர்ந்து முடிந்தது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (திங்கள்கிழமையன்று) ரூ.1,176.55 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ள நிலையில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்களும் ரூ.1,757.02 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 1.39 சதவிகிதம் குறைந்து பீப்பாய்க்கு 70.84 டாலராக உள்ளது.

வால் ஸ்ட்ரீட் ஒரே இரவில் மீண்டெழுந்ததும், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் வலுவான கொள்முதல் மற்றும் சரிந்த கச்சா எண்ணெய் விலையானது, பங்குச் சந்தைக்கு சாதகமாக அமைந்ததால் சென்செக்ஸ் தொடர்ந்து உயர்ந்துள்ளது என்று மேத்தா ஈக்விட்டீஸ் லிமிடெட் மூத்த துணைத் தலைவர் பிரசாந்த் தப்சே தெரிவித்துள்ளார்.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்