அனந்த் அம்பானி திருமணத்தில் விருந்தினர்களை கவர்ந்த உணவுகள்…

உள்ளூர் முதல் உலக புகழ்பெற்ற டிஷஸ் வரை… அனந்த் அம்பானி திருமணத்தில் விருந்தினர்களை கவர்ந்த உணவு வகைகள்!

ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட்

ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்டின் திருமணத்தில் பரிமாறப்பட்ட உணவு வகைகள் விருந்தினர்களை பெரிதும் கவர்ந்துள்ளன. இவ்வளவு வகையான உணவுகளை விருந்தினர்கள் எங்கேயும் பார்த்திராத அளவுக்கு உள்ளூர் முதல் உலகப் புகழ்பெற்றது என ஏராளமான பதார்த்தங்கள் திருமண கொண்டாட்டத்தில் இடம்பெற்றன.

ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்டின் திருமண கொண்டாட்டங்கள் சுமார் ஓராண்டாக உலகமே வியக்கும் வகையில் நடைபெற்று வருகிறது. திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் பிரமாண்டமாக நடத்தப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் முதல் திருமண கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் பிரதமர் மோடி வரை ஏராளமானோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். இந்நிலையில் 3 ஆம் நாள் கொண்டாட்டமாக மங்கள் உத்சவ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

விளம்பரம்

நேற்று நடைபெற்ற சுப ஆசிர்வாத நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் இந்திய அணி கேப்டன் தோனி, அவரது மனைவி சாக்ஷி மகள் ஜிவா, கியாரா அத்வானி, சித்தார்த் மல்ஹோத்ரா, அமிதாப் பச்சன் மற்றும் குடும்பத்தினர், நடிகர் சுனில் ஷெட்டி, அதியா ஷெட்டி, கே.எல். ராகுல், ரன்பிர் கபூர், ஜான்வி கபூர் உள்ளிட்டோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

அனைத்து விருந்தினர்களையும் முக மலர்ச்சியுடன் இருவரும் வரவேற்று, திருமண கொண்டாட்டத்தில் பங்கேற்க வைத்தனர். சமீபத்திய ஆண்டுகளில் எந்தவொரு மேடையிலும் நடனம் ஆடாத ரஜினிகாந்த், இந்த திருமணத்தில் நடனமாடி மனதை கவர்ந்தார்.

விளம்பரம்

இதேபோன்று திருமணத்தில் பங்கேற்ற விருந்தினர்கள் சிலருக்கு பல லட்ச ரூபாய் மதிப்பிலான அன்பளிப்புகளை அம்பானி குடும்பத்தினர் அளித்துள்ளனர்.

இதையும் படிங்க – ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் திருமண சுப ஆசிர்வாத நிகழ்ச்சி… குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்பு

மேலும் திருமணத்தின்போது உள்ளூர் முதல் உலகப் புகழ்பெற்றது வரை என ஏராளமான உணவு வகைகள் பரிமாறப்பட்டன. குறிப்பாக, வாரணாசி சாட், இந்திய, சீன, அமெரிக்க உணவு வகைகள், வகை வகையாய் ஐஸ்க்ரீம்கள்

விளம்பரம்இதையும் படிங்க – பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் தம்பதி

ராமேஸ்வரம் காபி, கார்லிக் தோசை, பெசரட்டு, ஆந்திர கர்நாடகாவில் பிரபலமாக இருக்கும் தட்டு இட்லி, பூரான் போலி என உலகில் எந்தெந்த பதார்த்தங்கள் பிரபலமாக இருக்குமோ அவை அனைத்தும் மகனின் திருமணத்தில் முகேஷ் அம்பானி இடம்பெறச் செய்தார்.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Anant Ambani
,
ANANT AMBANI RADHIKA MERCHANT WEDDING CELEBRATIONS

Related posts

இந்திய வளா்ச்சியில் பங்கேற்க வேண்டும்: சா்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு

பிகாா்: புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்தது

பஞ்சாப் அமைச்சரவை மாற்றம்: 4 போ் நீக்கம்; 5 பேருக்கு பதவி