அனந்த் – ராதிகா திருமணம்… பிரமாண்டம்னா இது தான் பிரமாண்டம்!

Anant – Radhika Wedding : திருமண கொண்டாட்டத்தில் உணர்ச்சிவசப்பட்ட ராதிகா மெர்ச்சன்ட்

மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் அனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் நேற்றிரவு கோலாகலமாக நடைபெற்றது. இதில், ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் திரை நட்சத்திரங்கள் சர்வதேச நாடுகளின் தலைவர்கள், இந்தியாவின் முக்கிய அரசியல்வாதிகள் என பலரும் பங்கேற்றனர். இந்நிலையில், திருமண அரங்கில் அனந்த் அம்பானியின் வருகை பிரமாண்டமாக இருந்தது. அவரது தந்தை முகேஷ் அம்பானி, அவரது சித்தப்பா அனில் அம்பானி ஆகியோருடன் பாரம்பரிய முறைப்படி திருமண அரங்கிற்கு வருகை புரிந்தார். அப்போது அங்கிருந்த உத்தவ் தாக்கரே உடன் கைகுலுக்கினார்.

விளம்பரம்விளம்பரம்

மறுபுறம் மணமகள் ராதிகா மெர்ச்சன்ட் மிகவும் நேர்த்தியான உடையில் சாரட் வண்டியில் நுழைந்தார். இது அங்கிருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ராதிகா மெர்ச்சன்ட் திருமண அரங்கில் நுழைந்தபோது, பிரபல திரைப்பட பாடகி ஷ்ரேயா கோஷல் பாடிக் கொண்டிருந்தார்.

விளம்பரம்விளம்பரம்

ராதிகா மெர்ச்சன்டை உறவினர்களும், அங்கிருந்த விருந்தினர்களும் புன்னகையுடன் வரவேற்றனர். அப்போது அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் முகங்களில் உணர்ச்சிப்பெருக்கு காணப்பட்டது. மற்றொரு வீடியோவில் ராதிகா தனது தந்தை வீரேன் மெர்ச்சன்ட் உடன் நடந்து வந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

விளம்பரம்

ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற இந்த திருமண விழாவில் பல பிரபலங்கள் பங்கேற்று, தங்களது மகிழ்ச்சியையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
ANANT AMBANI RADHIKA MERCHANT WEDDING CELEBRATIONS
,
Nita Ambani
,
Radhika

Related posts

சமூகவலைதளம் மூலம் பழக்கம்: 16 வயது மாணவியை சீரழித்த 4 பேர் கைது

சித்தராமையா மீதான வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்தக் கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல்

நேற்றிரவு… ஹிமான்ஷி குரானா!