அனந்த்-ராதிகா திருமணம்: மும்பையில் குவியும் முக்கிய திரை பிரபலங்கள்…

அனந்த்-ராதிகா திருமணம்: மும்பையில் குவியும் முக்கிய திரை பிரபலங்கள்… போட்டோஸ்!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி மற்றும் தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணம் நாளை நடைபெறுகிறது. இதில் பல உலக தலைவர்கள், உலக பிரபலங்கள், முதலீட்டாளர்கள், கல்வியாளர்கள், பாலிவுட் பிரபலங்கள் என பல துறை சார்ந்த பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

திருமணத்திற்கான தயாரிப்புகள் முழு வீச்சில் நடந்துவந்த நிலையில், குஜராத்தி திருமணங்களின் முக்கிய நிகழ்வான மாமேரு சடங்கு, முகேஷ் அம்பானியின் இல்லமான ஆன்டிலியாவில் சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. மாமேரு சடங்கு என்பது மணமகளை அவரது தாய் மாமன் சீர்வரிசையுடன் சந்திக்கும் நிகழ்வாகும். இதன் தொடர்ச்சியாக, கிரஹ சாந்தி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்வை மணமகள் ராதிகா மெர்ச்சன்ட்-ன் குடும்பத்தினர் நடத்தினர். இது தொடர்பான கலர்ஃபுல் போட்டோக்கள் இணையத்தில் ட்ரெண்டாகின. அதன்பின்னர், ஷிவ ஷக்தி பூஜையும் அனந்த்-ராதிகா திருமணத்தையொட்டி நடைபெற்றது.

விளம்பரம்

அதேபோல், சமீபத்தில் நடைபெற்ற அனந்த் மற்றும் ராதிகாவின் சங்கீத் நிகழ்வில் பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பெய்பர் நிகழ்ச்சி நடத்தினார். கடந்த மார்ச் மாதத்தில், குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடைபெற்ற அனந்த்-ராதிகாவின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தில் பிரபல பாப் பாடகி ரியானா கலந்துகொண்டு பிரமாண்ட நிகழ்ச்சி நடத்தினார். அவருடன், பிரபல சர்வதேச கலைஞர்களும் நிகழ்ச்சி நடத்தினார்கள்.

திருமண நிகழ்வில் கலந்துகொள்ளும் பல துறை சார்ந்த பிரபலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், முன்னாள் குடியரத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முதல்வர் மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் தொடங்கி முன்னாள் இங்கிலாந்து பிரதமர்கள் உள்ளிட்ட சர்வதேச விருந்தினர்கள் வரை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

கணவர் நிக் ஜோனஸுடன் நடிகை பிரியங்கா சோப்ரா
மும்பையில் நடிகர் ராம் சரண்

இதற்கிடையே, நாளை நடைபெற இருக்கும் அனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் திருமண விழாவில் கலந்துகொள்ள பாலிவுட் பிரபலங்கள் மட்டுமின்றி, தென்னிந்திய திரை பிரபலங்களும் மும்பையில் குவியத் தொடங்கியுள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Anant Ambani
,
ANANT AMBANI RADHIKA MERCHANT WEDDING CELEBRATIONS

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்