அனந்த்-ராதிகா திருமணம்: மெர்ச்சன்ட் குடும்பத்தினர் நடத்திய நிகழ்வு!

அனந்த்-ராதிகா திருமணத்தை முன்னிட்டு மெர்ச்சன்ட் குடும்பத்தினர் நடத்திய ‘கிரஹ சாந்தி பூஜை’!

அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் மும்பையில் தொடங்கி நடந்து வருகின்றன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி மற்றும் தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணம் வரும் 12ஆம் தேதி நடைபெறுகிறது.

திருமணத்திற்கான தயாரிப்புகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், குஜராத்தி திருமணங்களின் முக்கிய நிகழ்வான மாமேரு சடங்கு, முகேஷ் அம்பானியின் இல்லமான ஆன்டிலியாவில் சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. மாமேரு சடங்கு என்பது மணமகளை அவரது தாய் மாமன் சீர்வரிசையுடன் சந்திக்கும் நிகழ்வாகும்.

விளம்பரம்

இதன் தொடர்ச்சியாக, கிரஹ சாந்தி பூஜை இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வை மணமகள் ராதிகா மெர்ச்சன்ட்-ன் குடும்பத்தினர் நடத்தியுள்ளனர். இது தொடர்பான கலர்ஃபுல் போட்டோக்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

அதேபோல், இருதினங்களுக்கு முன்னர் நடைபெற்ற அனந்த் மற்றும் ராதிகாவின் சங்கீத் நிகழ்வில் பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பெய்பர் நிகழ்ச்சி நடத்தினார். அதேபோல், கடந்த மார்ச் மாதத்தில், குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடைபெற்ற அனந்த்-ராதிகாவின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தில் பிரபல பாப் பாடகி ரியானா கலந்துகொண்டு பிரமாண்ட நிகழ்ச்சி நடத்தினார். அவருடன், பிரபல சர்வதேச கலைஞர்களும் நிகழ்ச்சி நடத்தினார்கள்.

விளம்பரம்விளம்பரம்

Also Read |கோலாகலமாக நடைபெற்ற அனந்த் மற்றும் ராதிகாவின் ‘மாமேரு விழா’… சுவாரஸ்ய தகவல்களும் வீடியோவும்!

அனந்த் மற்றும் ராதிகாவின் திருமண சடங்குகள் ஜூலை 12ஆம் தேதி தொடங்கும். முதல் விழா ‘ஷுப் விவா’ என்று அழைக்கப்படுகிறது. இந்திய பாரம்பரியத்தில் அனைவரும் தோன்றுவர். ஜூலை 13 ‘ஷுப் ஆஷிர்வாத்’ தினமாக இருக்கும். மேலும், ஆடைக் குறியீடு என்பது இந்திய முறையாகும். ஜூலை 14 ‘மங்கல் உத்சவ்’ அல்லது திருமண வரவேற்பு ஆகும். இந்த செயல்பாடுகள் அனைத்தும் பிகேசியில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில் நடைபெறும்.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Anant Ambani
,
ANANT AMBANI RADHIKA MERCHANT WEDDING CELEBRATIONS

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்