அனைத்து மதத்தினரையும் இந்தியா சமமாக நடத்த வேண்டும் -அமெரிக்கா வேண்டுகோள்

அனைத்து மதத்தினரையும்
இந்தியா சமமாக நடத்த வேண்டும் -அமெரிக்கா வேண்டுகோள்அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை இந்தியாவிடம் எடுத்துரைத்ததாக அமெரிக்கா தெரிவித்தது.

அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை இந்தியாவிடம் எடுத்துரைத்ததாக அமெரிக்கா தெரிவித்தது.

உத்தர பிரதேசத்தில் கான்வா் (காவடி) யாத்திரையையொட்டி, உணவகங்களை நடத்தும் இஸ்லாமிய உரிமையாளா்கள் தங்கள் பெயரை குறிப்பிட மாநில அரசு கட்டாயப்படுத்துவதாக வெளியான அறிக்கை குறித்து அமெரிக்க செய்தித் தொடா்பாளா் மேத்யூ மில்லரிடம் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா்.

இதற்குப் பதிலளித்த அவா்,‘இதுதொடா்பாக வெளியான அறிக்கைகளையும், இந்த விதிகளை அமல்படுத்த இந்திய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருப்பதையும் நாங்கள் அறிந்துகொண்டோம்.

தற்போது இந்த விதிகள் அமல்படுத்தப்படவில்லை. உலகில் உள்ள அனைவருக்கும் மதச் சுதந்திரம் உள்ளது என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடு. எனவே, அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை இந்தியாவிடம் எடுத்துரைத்துள்ளோம்’ என்றாா்.

Related posts

மறைந்த பாடகர் எஸ்.பி.பி பெயரில் சாலை – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பாவம் செய்துவிட்டார் சந்திரபாபு நாயுடு.. கோவில்களில் பரிகார பூஜை: ஜெகன் மோகன் ரெட்டி அழைப்பு

பெண் தபேதாரின் பணியிட மாற்றத்துக்கு காரணம் மேயரின் அகங்காரமா? – தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி