அனைத்து வடிவிலான போட்டிகளிலும் விளையாட விரும்புகிறேன் – இந்திய வீரர்

இந்தியாவுக்காக 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாட விரும்புவதாக சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

மும்பை,

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் இந்திய அணி இலங்கையை அதன் சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்தது. அதன்மூலம் அவரது கேப்டன்ஷிப் பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியுள்ளார்.

முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவரான அஜித் அகர்கர், சூர்யகுமார் யாதவை தற்சமயம் டி20 வீரராக மட்டுமே பார்ப்பதாக கூறினார். ஏனெனில் ஒருநாள் போட்டிகளில் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் தடுமாற்றமாகவே செயல்பட்டார். அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான சூர்யகுமாருக்கு அறிமுகப் போட்டிக்கு பின் இன்னும் மறு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்நிலையில் தாமும் இந்தியாவுக்காக 3 வகையான கிரிக்கெட்டிலும் (டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட்) விளையாட விரும்புவதாக சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். அதற்காக மும்பையில் நடைபெறும் புஜ்ஜி பாபு உள்ளூர் தொடரில் விளையாட உள்ளதாகவும் சூர்யகுமார் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "இந்தியாவுக்காக நான் அனைத்து வடிவிலான போட்டிகளிலும் விளையாட விரும்புகிறேன். புஜ்ஜி பாபு தொடரில் விளையாடுவது இந்த சீசனில் அடுத்ததாக நடைபெற உள்ள டெஸ்ட் தொடர்களுக்கு தயாராக எனக்கு நல்ல பயிற்சியாக அமையும்" என்று கூறினார்.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 5-வது வீரராக இணைந்த அஸ்வின்

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: சதம் அடித்த பின் அஸ்வின் கூறியது என்ன..?

டெஸ்ட் கிரிக்கெட்: சச்சின் – ஜாகீர்கான் சாதனையை தகர்த்த அஸ்வின் – ஜடேஜா