‘அமரன்’ திரைப்படத்தில் முகுந்த் வரதராஜனின் சாதி அடையாளம் இடம்பெறாதது ஏன்? இயக்குநர் விளக்கம்

‘அமரன்’ திரைப்படத்தின் சர்ச்சைகளுக்கு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பதிலளித்துள்ளார்.

சென்னை,

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அமரன் திரைப்படம் தீபாவளி வெளியீடாக அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனின் ஆர்கேஎப்ஐ தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. மறைந்த தமிழக ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், முகுந்தின் மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவியும் நடித்துள்ளனர்.

உலகளவில் கிட்டதட்ட 900க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 'அமரன்' திரைப்படம் வெளியாகின. திரையிட்ட இடங்களில் எல்லாம் அமரன் படத்திற்கு மகத்தான வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கிடையே, இந்த படத்தின் சிறப்பு காட்சியை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு, நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, பட தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் பார்த்து மகிழ்ந்தனர். தொடர்ந்து, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் 'அமரன்' படத்தை பாராட்டினார். இப்படம் உலகளவில் ரூ. 150 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, பிராமணரான முகுந்த் வரதராஜனை திரைப்படத்தில் அடையாளப்படுத்தவில்லை என்கிற குற்றச்சாட்டு சமூக வலைதளங்களில் எழுந்தது. தமிழ் சினிமாவில் பிராமணர்கள் ஒதுக்கப்படுகிறார்கள் என்கிற அளவிற்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று அமரன் படத்தின் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வில் பேசிய இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி படத்தில் முகுந்த் வரதராஜன் பிராமணராக அடையாளப்படுத்தவில்லை என்கிற குற்றச்சாட்டைக் குறிப்பிட்டு, "முகுந்த் வரதராஜன் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் என்னிடம், முகுந்த்தை தமிழராக அடையாளப்படுத்தவும், படத்தில் தமிழ் சாயல் கொண்ட நடிகரைப் பயன்படுத்துங்கள் என்றும் கோரிக்கை வைத்தார். அமரன் படத்திற்காக முகுந்த் குடும்பத்தினரை சந்தித்தபோது அவரின் பெற்றோர் முகுந்துக்கு இந்தியன், தமிழன் என்கிற அடையாளம் மட்டும் போதும் என்றனர். அதேபோல், முகுந்த் பல சூழலிலும் தன்னை இந்தியன் என்றே முன்னிலைப்படுத்தியிருக்கிறார். பாரதியாரின் 'அச்சமில்லை, அச்சமில்லை' பாடல் அனைத்து மொழிகளிலும் தமிழில்தான் இருக்கிறது. இது, முகுந்த் வரதராஜனை கொண்டாட எடுக்கப்பட்ட படம் என்பதால் அவர் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது முக்கியமில்லை. பிரித்துப் பார்க்க எந்த தேவையும் இல்லை. அதையும் தாண்டி, அசோக் சக்ரா விருதைப் பெற்ற முகுந்த் வரதராஜனின் பணிக்கும், தியாகத்துக்கும் அமரன் திரைப்படம் மரியாதை செய்திருக்கிறது என்றே நினைக்கிறேன்" என்றார்.

#Amaran the celebration #AmaranMajorSuccess#MajorMukundVaradarajan#KamalHaasan#Sivakarthikeyan#SaiPallavi#RajkumarPeriasamy A Film By @Rajkumar_KP@ikamalhaasan@Siva_Kartikeyan#Mahendran@Rajkumar_KP@Sai_Pallavi92@gvprakash@anbariv@RKFI@Dop_Sai@rajeevan69… pic.twitter.com/26rCodWUwa

— Raaj Kamal Films International (@RKFI) November 4, 2024

இதே பிரச்சினை சில ஆண்டுகளுக்கு முன்பு சுதா கொங்காரா இயக்கத்தில் வெளியான 'சூரரைப் போற்று' படத்திலும் நிகழ்ந்தது. தமிழ் பிரமாண சமூகத்தைச் சேர்ந்த கேப்டன் கோபிநாத்தின் கதாபாத்திரம் அந்தப் படத்தில் வேறு ஒரு சமூகத்தைச் சேர்ந்தவராக காண்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

முதல்வர் மருந்தகம் அமைக்க வாய்ப்பு: எவ்வாறு விண்ணப்பிப்பது? வெளியான அறிவிப்பு!

ஜெய்சங்கர் பேட்டியை ஒளிபரப்பிய ஆஸி., ஊடகத்திற்கு கனடா தடை: இந்தியா கண்டனம்

India raids offices of sellers using Amazon, Flipkart platforms, sources say