அமலாக்கத்துறை விசாரணை நடத்திய பள்ளிப்பட்டு இளைஞர்கள் கைது

சென்னை: திருவள்ளூர் அருகே, பள்ளிப்பட்டு பகுதியில், 2 கோடி ரூபாய் பணம் பரிவா்த்தனை செய்தது குறித்து 3 இளைஞா்களிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்த நிலையில், நான்கு பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் மூன்று பேரும் வேலைக்காக சென்னையில் உள்ள அஜ்மல் என்பவரை சந்தித்தாகக் கூறப்படுகிறது. இவர்கள், சோளிங்கரில் உள்ள டயர் தயாரிப்பு தொழிற்சாலையில் பணியாற்றி வந்த நிலையில், வேலையை விட்டுவிட்டு ஆன்லைன் மூலம் வேலை செய்வதாகக் கூறியிருக்கிறார்கள்.

இதற்கிடையே அஜ்மல் மூலம் மூன்று பேருக்கும் வங்கிக் கணக்குத் தொடங்கப்பட்டு அதில் பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது. ஏற்கனவே அஜ்மல் தொடர்பான ஹவாலா பண மோசடி வழக்கை ஆந்திர காவல்துறை விசாரித்து வருகிறது. இந்த நிலையில், பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த நான்கு பேரை அமலாக்கத் துறை கைது செய்திருப்பது அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அரவிந்த கேஜரிவாலால் தில்லி முதல்வர் அலுவலகத்துக்குள் நுழைய முடியாது! ஏன்?

பள்ளிப்பட்டு அருகே 3 இளைஞா்களிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை 10 மணி நேரத்துக்கும் மேலாக விசாரனை மேற்கொண்டு வந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஒன்றியம் குமாரராஜப்பேட்டை காலனியைச் சோ்ந்த தமிழரசன்(27), மோட்டூா் கிராமத்தை சோ்ந்த அரவிந்த்(25) மற்றும் பிரகாஷ்(31). இவா்கள் மூவரும் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கா் பகுதியில் செயல்படும் டயா் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தனா். கடந்த சில நாள்களுக்கு முன்பு மூவரும் வேலையில் இருந்து நின்று விட்டு ஆன்லைன் மூலம் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இளைஞா்களின் 3 போ் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.2 கோடி பணம் பரிவா்த்தனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வியாழக்கிழமை அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு குமாரராஜப்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த தமிழ்ச்செல்வன், அரவிந்த் மற்றும் பிரகாஷ் ஆகிய 3 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தினா்.

சொர்க்க வாசலா, சென்னை விமான நிலையத்தின் 9வது நுழைவாயில்! அமலாக்கத் துறை அதிர்ச்சி!!

தமிழ்ச்செல்வனின் உறவினரான அதே பகுதியைச் சோ்ந்த அருணா என்பவரின் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்.

அமலாக்கத்துறை அதிகாரிகளில் சோதனை செய்ததால், சிஆா்பிஎப், போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 10 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நீடித்தது. பின்னா் பள்ளிப்பட்டு காவல் நிலையத்துக்கு 3 பேரையும் அழைத்துச் சென்று விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அருணா உள்பட நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

சொல்லப் போனால்… திமுக பவள விழாவும் திராவிட சமரசங்களும்!

க்வாட் உறுப்பு நாடுகள் சுதந்திரமாக செயல்படுவது முக்கியம்: மோடி

இன்றைய தினப்பலன்கள்!