அமெரிக்காவில் இருந்தாலும் அரசு பணி தொடர்கிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சான் பிரான்சிஸ்கோ,

தமிழ்நாடு 2030ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டும் என இலக்கு நிர்ணயித்து அதற்கான பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி மாதம் அமெரிக்கா சென்றார்.

சான் பிரான்சிஸ்கோ மாநகரில் மைக்ரோசாப்ட், கூகுள் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அடுத்து சிகாகோ நகரில் ஈட்டன் மற்றும் அஷ்யூரன்ட், டிரில்லியன்ட் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. 17 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 14ம் தேதி சென்னை திரும்புகிறார்.

இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில், "அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள், உலகை உள்ளங்கைக்குள் கொண்டு வந்திருக்கின்றன. அயலக மண்ணிலும், அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் இ-ஆபீஸ் (E-office) வழியே பணி தொடர்கிறது" என்று அதில் பதிவிட்டுள்ளார்.�

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள், உலகை உள்ளங்கைக்குள் கொண்டு வந்திருக்கின்றன.அயலக மண்ணிலும், அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் #e_office வழியே பணி தொடர்கிறது… pic.twitter.com/WeuWB1B4yn

— M.K.Stalin (@mkstalin)
September 7, 2024

Related posts

முக்கிய வழக்குகளை மீண்டும் தோண்டி எடுத்து விசாரணை: இலங்கை புதிய அரசு உத்தரவு

லெபனானை முழு பலத்துடன் ஆதரிப்போம் – ஈரான்

ஈராக்கில் இருந்து இஸ்ரேல் மீது டிரோன் தாக்குதல்