அமெரிக்காவுக்கு நிகராக சாலை வசதி: தமிழக மக்களுக்கு சத்தியம் செய்த மத்திய அமைச்சர்

சாலை போக்குவரத்தை பொறுத்துவரை தமிழக மக்களுக்கு நான் ஒரு சத்தியம் செய்து தருகிறேன். மத்திய அரசு, சாலை கட்டுமானத்தை அமெரிக்கா போன்று தரத்திற்கு நிகராக கொண்டு வருவோம் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று தஞ்சைக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்து, சாலைப் பணிகளை பார்வையிட்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நிதின் கட்கரி, தஞ்சாவூர் – விக்கரவாண்டி நான்கு வழிச்சாலை, 4,730 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 164 கி.மீ.,துாரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் – சோழபுரம், சோழபுரம் – சேத்தியாதோப்பு சாலை பணிகள் 95 சதவீத நிறைவு பெற்றுள்ளது. மொத்த திட்டத்தில் நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல்கள் தான் முக்கிய சுணக்கமாக இருந்தது. தற்போது 5 சதவீத பணிகள் மட்டுமே நிலுவையில் உள்ளது. அந்த 5 சதவீதமும் நிலம் கையகப்படுத்துவதில் தான் சிக்கல் ஏற்பட்டது. இத்தனை தடைகளை தாண்டியும், சாலை மிகவும் தரமாக அமைந்தது எனக்கு மிக பெரிய மகிழ்ச்சி. நான்கு ஆண்டுகள் இந்த சாலை பணிகள் தாமதமாகி இருந்தாலும், சாலையானது மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது.

ஆந்திர, தமிழக எல்லையில் 15 ஆயிரம் கோடி ரூபாயில், ராணிப்பேட்டை – சென்னை சாலையை விரிவாக்கம் செய்வதன் மூலம், சென்னை, பெங்களூர், ஆந்திரா இடையிலான கனரக வாகன போக்குவரத்து குறையும்.

செமிகண்டக்டர் இறக்குமதி ஏன்? நிர்மலா சீதாராமனிடம் கேள்வி கேட்ட இளைஞர் எங்கே?

மதுரவயல் ரிங்ரோடு, ஸ்ரீபெரும்புதுார் – சமுத்திரவயல், ராணிபேட்டை தொழிற்சாலைகளை சென்னை – பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலையை இணைப்பதற்கான சாலை பணிகள் துவங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 727 கி.மீ., 20 ஆயிரம் கோடி மதிப்பீட்டில், நான்கு வழிசாலையானது கோவை – சத்தியமங்கலம், துாத்துக்குடி – கன்னியாகுமரி, ராமநாதபுரம் – ராமேஸ்வரம், ராமேஸ்வரம் – அரிச்சல்முனை, மதுரை – ராமேஸ்வரம், மங்களூர் – விழுப்புரம், மதுரை – தொண்டி, சேலம் – வாணியம்பாடி, மதுரை – தேனி நான்கு வழிசாலை அமைக்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூர்– அரியலுார் – பெரம்பலுார் நான்கு வழிசாலையானது சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு பயன் உள்ளதாக அமையும். குலேசேகரப்பட்டினத்தில் இஸ்ரோ ஏவுதளம் அமைத்துள்ளது இதற்கான தனிசாலை அமைக்க பணிகள் துவங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாயில், 2,781 கி.மீ., துாரத்திற்கு, புதிய 71 சாலைகள் அமைக்கும் திட்டம் வர உள்ளது. 1,343 கி.மீ., 68 திட்டங்கள் மூலம் 60 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

2014ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை 9,300 கி.மீ., துாரத்திற்கு 2 லட்சம் கோடி ரூபாய் செல்வில் சாலைகள் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது. அதிகமான முக்கியத்தும் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது.

நாடு முழுவதும் 5 லட்சம் கோடி மதிப்பீட்டில், 10 ஆயிரம் கி.மீ., நீளத்தில் 27 புதிய பசுமை வழி சாலை அமைய உள்ளது. தமிழகத்தில் 3 மூன்று பசுமை வழிசாலை, 187 கி.மீ., நீளத்தில் 10 ஆயிரம் 100 கோடி ரூபாய் செலவில் அமைய உள்ளது. நீர்,மின்சாரம், போக்குவரத்து தான் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் தமிழகம் எப்போதும் சிறந்து விளங்குகிறது.

தமிழக முதல்வருக்கு ஒரு கோரிக்கை, அரசு நிலம் கையாகப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அதிகளவில் பணத்தை நாங்கள் செலவு செய்ய தயராக உள்ளோம். சாலைப் போக்குவரத்தை பொறுத்துவரை தமிழக மக்களுக்கு நான் ஒரு சத்தியம் செய்து தருகிறேன். மத்திய அரசு சாலை கட்டுமானத்தை அமெரிக்கா போன்ற தரத்திற்கு நிகராக கொண்டு வருவோம். தேசிய நெடுஞ்சாலையில் நாட்டில் தமிழகம் நம்பர் ஒன்றாக உள்ளது. தமிழகம் பங்களிப்பு நல்லப்படியாக உள்ளது.

நதிநீர் இணைப்புக்காக 49 திட்டம் கொண்டு வரப்பட்டது. இதில், ஆந்திரா கோலவரத்தில் உள்ள கோதாவரி ஆற்றில் கலக்கும் 30 டி.எம்.சி., தண்ணீரை திசை திருப்ப திட்டமிட்டேன். அந்த திட்டம் கோதாவரியில் இருந்து கிருஷ்ணா – பெண்ணாறு – காவிரி இணைப்பு மூலம் தண்ணீரை தமிழகத்தினை கடைக்கோடி வரை கொண்டு செல்ல திட்டம் அமைக்கப்பட்டது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழகம் – கர்நாடக பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார் நிதின் கட்கரி.

Related posts

மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வு நியாயமாக இருக்க வேண்டும்: பொதுக்குழு கூட்டத்தில் கமல்ஹாசன் பேச்சு

மாமியார் தலையில் கல்லை போட்டு கொன்ற மருமகள்… கரூரில் பயங்கரம்

சென்னை கடற்கரை – தாம்பரம் மின்சார ரெயில் சேவை நாளை ரத்து