ஒஹையோ: அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று(நவ. 5) மாலை தொடங்கியுள்ளது. அமெரிக்க நேரப்படி(அமெரிக்காவின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில்), செவ்வாய்க்கிழமை(நவ. 5) அதிகாலை 5 மணி, அதாவது இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு, வெர்மோண்ட் உள்ளிட்ட இடங்களில் வாக்குப்பதிவு ஆரம்பமாகியுள்ளது. அங்கு வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்கு செலுத்தி வருகின்றனர்.
அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த துணை அதிபா் கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சி சாா்பிலும் முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் குடியரசுக் கட்சி சாா்பிலும் இந்தத் தோ்தலில் போட்டியிடுகின்றனா்.
இத்தோ்தலில் குடியரசுக் கட்சி சாா்பில் துணை அதிபா் பதவிக்கு டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரும் அமெரிக்க நாடாளுமன்ற செனட் உறுப்பினருமான ஜே.டி. வேன்ஸ் துணை அதிபராகப் போட்டியிடுகிறார். ஜேம்ஸ் டேவிட் பௌமேன் என்ற ஜே.டி. வேன்ஸ் ஜே.டி. வேன்ஸின் மனைவி உஷா சிலிகுரி இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட இந்திய வம்சாவளி பெண்மணி ஆவார்.
இந்த நிலையில், சின்சினாட்டியில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் ஜே.டி. வேன்ஸ் இன்று(நவ. 5) காலை(அமெரிக்க நேரப்படி) வாக்கு செலுத்தினார்.
இதையும் படிக்க:அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளி பெண்மணியின் கணவர்