அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை மாலையில் தொடங்கி புதன்கிழமை காலை வரையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, காலை புதன்கிழமை காலை 5.30 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது.
இதுவரையில் வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளப்பட்ட 3 மாகாணங்களில் 2 மாகாணங்களில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்தான் முன்னிலை பெற்றுள்ளார்.
இதுவரையில், டொனால்ட் டிரம்ப் 54 சதவிகிதத்துக்கு அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ள நிலையில், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் 44 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.
இதையும் படிக்க:அமெரிக்காவின் புதிய அதிபா் யாா்? விறுவிறுப்பான வாக்குப் பதிவு
வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த இண்டியானா, கென்டக்கி, மேற்கு வெர்ஜினியாவில் டொனால்ட் டிரம்ப்பின் வெற்றி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
வெர்மோன்டில் மட்டும் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார்.