அமெரிக்க அதிபர் தேர்தல் டொனால்ட் டிரம்ப் மனைவி மெலானியாவுடன் வந்து வாக்களித்தார்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசுக் கட்சி வேட்பாளருமான டிரம்ப், புளோரிடாவில் உள்ள வாக்குச் சாவடியில் தமது மனைவி மெலானியாவுடன் வந்து வாக்களித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், நியாயமான முறையில் தேர்தல் நடந்து தாம் தோற்று விட்டாலும் கூட அதனை ஏற்கத் தயார் என்று கூறினார். இதுவரை தேர்தல் அமைதியாக நடைபெற்று வருவதாகவும் தாம் வன்முறையை ஒருபோதும் விரும்பவில்லை என்றும் கூறினார்.

அமெரிக்காவின் வரலாற்றில் இது மிகவும் முக்கியமான நாள் என்றும் தமது எக்ஸ் தளத்தில் டொனால்ட் டிரம்ப் கூறினார். எத்தனை நேரம் ஆனாலும் காத்திருந்து வாக்களிக்குமாறு அவர் வாக்காளர்களிடம் கேட்டுக் கொண்டார்.

Related posts

சென்செக்ஸ் 600 புள்ளிகள் நிஃப்டி 200 புள்ளிகள் உயர்வு!

லாரன்ஸ் பிஷ்னோய் டி-ஷர்ட் விற்பனையை நிறுத்தியது மீஷோ!

கோவை நூலகத்துக்கு பெரியார் பெயர்: மு.க. ஸ்டாலின்