அமெரிக்க அதிபர் தேர்தல்: தமிழ் உள்பட இந்திய மொழிகளில் வழிமுறைகள்

அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு வெளியிடப்பட்டிருக்கும் விளக்க வழிமுறைகளில், தமிழ், தெலுங்கு உள்பட தென்னிந்திய மொழிகளும் இடம்பெற்றுள்ளன.

அமெரிக்காவின் 47-வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான அதிபா் தேர்தல், நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. இந்நிலையில் தற்போது வெளியான புகைப்படம் ஒன்றில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட இந்திய மொழிகளில் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வழிமுறைகள் விளக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்க அதிபரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள நிலையில், குடியரசுக் கட்சி சார்பில் அதிபா் பதவிக்கான வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி வேட்பாளராக தற்போதைய அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் களம்காண்கிறார்.

இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில், தேர்தலுக்கான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

அமெரிக்காவில், ஏராளமான வெளிநாடு வாழ் மக்களும் குடியுரிமை பெற்று வசித்து வருவதால், பல்வேறு நாட்டு மொழிகளிலும், வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், குறிப்பிடத்தக்க அம்சமாக, ஹிந்தி இரண்டாம் இடத்தில் உள்ளது. அதுபோல, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் வழிகாட்டுதல் விளக்கப்பட்டுள்ளது.

அந்த விளக்கத்தில்,

நவம்பர் 5ஆம் தேதி 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்

அஞ்சல் வாக்குகளுக்கான வாக்குச் சீட்டுகள்

அஞ்சல் செய்யப்படுகின்றன: அக். 7

பதிவர் அலுவலகத்தில் முன்கூட்டிய வாக்குப்பதிவு: அக்.7

வாக்கு மையங்கள் திறப்பு : அக்.26 – நவ.5

வாக்களிக்க கடைசி நாள்: நவ. 5, தேர்தல் நாள்

மேலும் தகவலுக்கு (866) 430-vote (8683) என்ற எண்ணில் அழைக்கவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சான்டா கிளாரா மாகாணத்தின் சார்பில், வாக்காளர்களுக்கு விடுக்கப்பட்ட வழிமுறை என்று தெரிய வந்துள்ளது.

உலகின் மிகப்பெரிய வளர்ந்த நாடுகளில் முன்னிலையில் இருக்கும் அமெரிக்காவின், தேர்தல் வழிகாட்டுதல், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியிடப்பட்டிருப்பது, அங்கு வாழும் தமிழர்கள் உள்ளிட்ட தென்னிந்திய மாநில மக்களின் பெரும்பான்மையை உணர்த்துவதாக உள்ளது.

Related posts

பிளேயிங் லெவனில் இடம்பெற கே.எல்.ராகுல், சர்ஃபராஸ் இடையே போட்டி: இந்திய அணி பயிற்சியாளர்

சென்னையில் ‘இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டம்’ – பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

ஓராண்டில் இரட்டிப்பான பாலஸ்தீன வறுமை நிலை: 74.3%