அமெரிக்க ஓபன் டென்னிஸ்… வரும் 26ம் தேதி தொடக்கம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற 26-ம் தேதி நியூயார்க்கில் தொடங்குகிறது.

நியூயார்க்,

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி வரும் 26-ம் தேதி நியூயார்க்கில் தொடங்குகிறது. இந்த போட்டியில் யார்-யாருடன் மோதுவது என்பது குலுக்கல் முறை மூலம் நேற்று முடிவு செய்யப்பட்டது.

இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னெர் முதல் சுற்றில் 93-ம்நிலை வீரரான அமெரிக்காவின் மெக்டொனால்டை எதிர்கொள்கிறார். ஒலிம்பிக் சாம்பியனும், நடப்பு அமெரிக்க ஓபன் சாம்பியனுமான முன்னணி வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் முதல் ரவுண்டில் தகுதி நிலை வீரரை சந்திக்கிறார்.

இதேபோல், பெண்கள் ஒற்றையர் பிரிவில் இகா ஸ்வியாடெக் (போலந்து) முதல் ரவுண்டில் தகுதி சுற்று மூலம் பிரதான சுற்றை எட்டும் வீராங்கனையை எதிர்கொள்கிறார். நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் கோகா கோப், பிரான்சின் வரா கிராசிவாவுடன் மோதுகிறார்.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 5-வது வீரராக இணைந்த அஸ்வின்

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: சதம் அடித்த பின் அஸ்வின் கூறியது என்ன..?

டெஸ்ட் கிரிக்கெட்: சச்சின் – ஜாகீர்கான் சாதனையை தகர்த்த அஸ்வின் – ஜடேஜா