அமேசான் வனப்பகுதியில் விழுந்து வெடித்து சிதறிய விமானம் – 5 பேர் பலி

அமேசான் வனப்பகுதியில் விமானம் விழுந்து வெடித்து சிதறிய சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

பிரேசிலா,

பிரேசில் நாட்டின் மடோ கிராஸ்ரோ மாகாணம் அமேசானியன் நகரில் இருந்து ராண்டனொபொலிஸ் நகருக்கு நேற்று சிறிய ரக விமானம் புறப்பட்டது. விமானத்தில் மொத்தம் 5 பேர் பயணித்தனர். அமேசான் வனப்பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த விமானம் திடீரென தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில், தரையில் விழுந்த சில விநாடிகளில் விமானம் முழுவதும் தீ பற்றி வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் அர்மின் ஸ்பிரிங்ஸ் என்ற தொழிலதிபர் அவரது 2 பேரன்களும் அடக்கம் என தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றிய அதிகாரிகள் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

அமெரிக்க வாக்காளர்களிடம் கமலா ஹாரிசுக்கு அதிகரிக்கும் ஆதரவு – கருத்துக்கணிப்பில் புதிய தகவல்

சிந்து நதி நீர் ஒப்பந்த மறு ஆய்வு.. இந்தியாவின் நோட்டீசுக்கு பாகிஸ்தான் பதில்

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்