அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டவும் – முதல்வருக்கு ஆளுநர் அறிவுறுத்தல்

அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டவும் – மேற்குவங்க முதல்வருக்கு ஆளுநர் அறிவுறுத்தல்

கொல்கத்தாவில் சட்டம்-ஒழுங்கை பராமரிப்பது குறித்து விவாதிக்க உடனடியாக அமைச்சரவையை கூட்டி முடிவெடுக்க வேண்டும் என முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு ஆளுநர் ஆனந்த போஸ் அறிவுறுத்தியுள்ளார்.

மருத்துவமனையில் கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி வேண்டி கொல்கத்தாவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு ஆளுநர் ஆனந்த போஸ் எழுதியுள்ள கடிதத்தில், மாநிலத்தில் குழப்பமான சூழல் நிலவுவதால்தான் அமைதியாக இருக்க முடியாது என தெரிவித்துள்ளார். கொல்கத்தா காவல் ஆணையரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்ற பொதுமக்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் எனவும் ஆளுநர் ஆனந்தபோஸ் வலியுறுத்தியுள்ளார்.

விளம்பரம்

இதனிடையே, பெண் மருத்துவர் கொலை விவகாரத்தை அரசு முறையாக கையாளவில்லை என எதிர்ப்புத் தெரிவித்து, ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ஜவ்கர் சிர்கார் ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து, திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜிக்கு ஜவ்கர் சிர்கார் கடிதம் எழுதியுள்ளார். அதில், அரசுக்கு எதிராக இந்த அளவுக்கான எதிர்ப்பு மற்றும் நம்பிக்கையின்மையை தான் பார்த்ததே இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க:
40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பார்வை குறைபாட்டை சரிசெய்ய சொட்டு மருந்து… எப்போது அறிமுகம் தெரியுமா?

விளம்பரம்

பெண் மருத்துவருக்கு நடந்த பயங்கர சம்பவம் தொடர்பான விவகாரத்தில் பழைய மம்தா பானர்ஜி பாணியை தான் எதிர்பார்த்ததாகவும், ஆனால் அது நடக்கவே இல்லை என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் மேற்கு வங்கத்தில் உள்ள ஜனநாயக சக்திகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், மோதலுக்கு அப்பாற்பட்ட அணுகுமுறையை கட்சி எடுக்காவிட்டால், மாநிலத்தை வகுப்புவாத சக்திகள் கைப்பற்றும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
kolkata
,
Kolkata Doctor Murder Rape
,
Latest News
,
mamta banerjee

Related posts

மேஷம் முதல் மீனம்: தினப்பலன்கள்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதான சீசிங் ராஜா என்கவுன்டர்!

நாளைமுதல் 2 மண்டலங்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம்