அமைச்சரவையில் யார், யாருக்கு இடம்? – முழு விபரம் இதோ

Modi Cabinet 3.0 | 27 ஓபிசி அமைச்சர்கள், 11 பெண்கள், 5 சிறுபான்மையினர் : அமைச்சரவையில் யார், யாருக்கு இடம்? – முழு விபரம் இதோ

மோடி 3.0 அமைச்சரவை

பிரதமர் மோடியின் மூன்றாவது அமைச்சரவையில் கேபினட் அமைச்சர்களில் 9 பேர் புதுமுகங்கள் இடம்பெற்றுள்ளனர். அதேபோல், இணை அமைச்சர்களில் 24 புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் யார், யார்? மகளிர் எத்தனை பேர், கவனம் ஈர்க்கும் அமைச்சர்கள் யார்? உள்ளிட்டவற்றை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

பிரதமர் மோடியின் 3-வது அரசின் அமைச்சரவையில், 30 கேபினட் அமைச்சர்கள், 5 தனி பொறுப்புடன் கூடிய இணை-அமைச்சர்கள் மற்றும் 36 இணை அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இதில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 27 பேருக்கும், பட்டியலினத்தைச் சேர்ந்த 10 பேருக்கும், பழங்குடியினத்தைச் சேர்ந்த 5 பேருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் 5 பேரும் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர்.

விளம்பரம்

3 அல்லது அதற்கு மேற்பட்ட முறை எம்பியாக தேர்வான 43 பேருக்கு தற்போதைய மத்திய அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியுடன் சேர்த்து மாநில முதலமைச்சர்களாக இருந்த 7 பேரும், அமைச்சர்களாக பணியாற்றிய அனுபவமுள்ள 23 பேரும் மத்திய அமைச்சர்களாகியுள்ளனர். குறிப்பாக, ஹெச்.டி.குமாரசாமி, சிவ்ராஜ் சிவ் சவுகான், மனோகர் லால் கட்டார், ஜிதன் ராம் மாஞ்சி ஆகிய முன்னாள் முதலமைச்சர்கள் முதல் முறையாக கேபினட் அமைச்சர்களாகியுள்ளனர்.

இவ்வாறு, தற்போதைய அமைச்சரவையில் புதுமுகங்களாக கேபினட் அமைச்சர்கள் 9 பேர் மற்றும் இணை அமைச்சர்கள் 24 பேர் புதுமுகங்களாக உள்ளனர்.

விளம்பரம்

கூட்டணி கட்சி தலைவரான லோக் ஜன சக்தி தலைவர் சிராக் பஸ்வான், ஐக்கிய ஜனதா தளத்தின் லாலன் சிங், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ராம் மோகன் ஆகியோரும் புதுமுகங்களாக மத்திய அமைச்சரவையில் இணைந்துள்ளனர்.

மோடி 3.0 அமைச்சரவையில் மகளிர் 7 பேர் இடம்பிடித்துள்ளனர். மத்திய கேபினட் அமைச்சர்களாக நிர்மலா சீதாராமன் மற்றும் அன்னபூர்ணா தேவி பொறுப்பேற்றனர்.

மத்திய இணை-அமைச்சர்களாக சாவித்ரி தாக்கூர், நிமுபென் பம்பானியா, ரக்ஷா கட்சே, ஷோபா கரந்த்லாஜே, அனுப்ரியா பட்டேல் ஆகியோர் உள்ளனர். இவர்கள் அனைவரும் பாஜகவை சேர்ந்தவர்கள்.

விளம்பரம்

மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் 2 முறை மத்திய அமைச்சராக இருந்து பின்னர் பாஜகவில் இணைந்த உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஜித்தின் பிரசதா இணை-அமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : மோடி 3.0 அமைச்சரவையில் இடம்பெற்ற தென்னிந்திய முகங்கள் இவர்கள்தான் – லிஸ்ட் இதோ

79 வயதாகும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா தலைவர் ஜிதன் ராம் மாஞ்சி, அமைச்சரையின் மூத்த அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த இணை-அமைச்சர் சந்திரசேகர பெம்மசானி சொத்து மதிப்பு ஐந்தாயிரத்து 700 கோடி ரூபாய் என்பதால், இவர் மத்திய அமைச்சரவையின் மிக பணக்கார அமைச்சராக அறியப்படுகிறார்.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Cabinet
,
Lok Sabha Election 2024
,
Lok Sabha Election Results 2024
,
Modi Cabinet
,
union minister

Related posts

பெங்களூருவில் அதிர்ச்சி: இளம்பெண் உடல் 30 துண்டுகளாக பிரிட்ஜில் இருந்த கொடூரம்

“ஏழுமலையானே என்னை மன்னித்துவிடு…” – பவன் கல்யாண் பதிவு

காவல் நிலையங்களில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: நவீன் பட்நாயக்