அமைச்சரவை பட்டியலில் அண்ணாமலை, தமிழிசை பெயர்கள்?

அமைச்சரவை பட்டியலில் அண்ணாமலை, தமிழிசை பெயர்கள்? இன்னும் யாரெல்லாம் தெரியுமா?

அண்ணாமலை – எல்.முருகன்,தமிழிசை சௌந்தரராஜன்

நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நாளை இரவு 7.15 மணிக்கு பதவியேற்க உள்ளார். அவருடன் புதிய அமைச்சரவையும் பதவியேற்க உள்ளது. இந்த அமைச்சரவை பட்டியலில் யாரெல்லாம் இடம்பெறுவார்கள் என ஒரு பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழிசையும் இடம்பெற்றுள்ளார்கள்.

அதன்படி, உத்தரப்பிரதேச மாநிலத்திலிருந்து ராஜ்நாத் சிங் அமைச்சரவையில் தொடர்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் ஜிதின் பிரசாத் அமைச்சரவையில் இடம் பெறுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

பீகார் மாநிலத்தில் உஜியார்பூரில் இருந்து வெற்றி பெற்ற நித்யானந்த் ராய் மத்திய உள்துறை இணை அமைச்சராவார் என்றும், லாலு பிரசாத்தின் மகள் ரோகினி ஆச்சார்யாவை தோற்கடித்த ராஜீவ் பிரதாப் ரூடி, முசாபர்பூர் எம்.பி ராஜ்பூஷன் நிஷாத், பெட்டியாவில் இருந்து எம்.பி.யான சஞ்சய் ஜெய்ஸ்வால் ஆகியோர் அமைச்சரவையில் இடம்பெறலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க:
பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளும் தமிழக பெண் லோகோ பைலட் – யார் அவர் தெரியுமா?

மகாராஷ்டிராவிலிருந்து நிதின் கட்கரி, பியூஷ் கோயல், மற்றும் நாராயண் ரானே கொங்கன் ஆகியோர் இடம்பெறுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

கர்நாடகாவிலிருந்து பிரஹலாத் ஜோஷி, பசவராஜ் பொம்மை, கோவிந்த் கர்ஜோல், பிசி மோகன் ஆகியோரும், தெலுங்கானாவிலிருந்து கிஷன் ரெட்டி, ஈடால ராஜேந்தர், டி.கே.அருணா, டி அரவிந்த், பாண்டி சஞ்சயும் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து புரந்தேஸ்வரி ஆகியோரும் அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஒடிசா மாநிலத்திலிருந்து அஸ்வினி வைஷ்ணவ், தர்மேந்திர பிரதான், மன்மோகன் சமல் ஆகியோரும், ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து கஜேந்திர சிங் ஷெகாவத், துஷாயந்த் சிங் ஆகியோரும் கேரளாவிலிருந்து சுரேஷ் கோபி வங்காளத்திலிருந்து சாந்தனு தாக்கூர் ஆகியோரும் தேர்வாவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்
கோடையில் பழங்கள் மற்றும் காய்கறிகளை நீண்ட காலத்திற்கு புதிதாக வைத்திருப்பது எப்படி.?
மேலும் செய்திகள்…

மேலும் தமிழ்நாட்டிலிருந்து தமிழிசை சௌந்தரராஜன், எல் முருகன் மற்றும் அண்ணாமலை ஆகியோரும், ஜம்மு காஷ்மீரிலிருந்து ஜிதேந்திர சிங், ஜுகல் கிஷோர் சர்மா தரஞ்சித் சிங் சந்து ஆகியோரும் உத்தரகாண்ட் மாநிலத்திலிருந்து அனில் பலுனி அகியோரிம் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Annamalai
,
L Murugan
,
Modi Cabinet
,
Tamilisai Soundararajan
,
Union cabinet Ministry

Related posts

பெங்களூருவில் அதிர்ச்சி: இளம்பெண் உடல் 30 துண்டுகளாக பிரிட்ஜில் இருந்த கொடூரம்

“ஏழுமலையானே என்னை மன்னித்துவிடு…” – பவன் கல்யாண் பதிவு

காவல் நிலையங்களில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: நவீன் பட்நாயக்