அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’ புத்தகம் – முதல்-அமைச்சர் வெளியிட்டார்

அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’ புத்தகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

சென்னை,

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியுடனான தனது நினைவுகளை 'கலைஞர் எனும் தாய்' எனும் பெயரில் அமைச்சர் எ.வ.வேலு புத்தகமாக எழுதியுள்ளார். இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். தொடர்ந்து 'கலைஞர் எனும் தாய்' புத்தகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, அதனை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். இதையடுத்து 'கலைஞர் எனும் தாய்' புத்தகத்தை காட்சி வடிவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!