அம்பத்தூர் பால்பண்ணையில் அமைச்சர் ஆர். எஸ். ராஜ கண்ணப்பன் ஆய்வு

அம்பத்தூர் ஆவின் பால்பண்ணை மற்றும் அம்பத்தூர் பால் உபப் பொருட்கள் பண்ணையில் வியாழக்கிழமை பால்வளத் துறை ஆர். எஸ். ராஜ கண்ணப்பன் ஆய்வு செய்தார்.

புதிதாக பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள பால்வளத்துறை அமைச்சர் ஆர். எஸ். ராஜ கண்ணப்பன் வியாழக்கிழமை(அக்.3) அம்பத்தூர் பால்பண்ணை மற்றும் பால் உபப் பொருட்கள் பண்ணையில் ஆய்வு மேற்கொண்டார்.

அம்பத்தூர் பால்பண்ணையில் நாள்தோறும் சுமார் 4 லட்சத்து 60 ஆயிரம் லிட்டர் பால் தயாரிக்கப்பட்டு அம்பத்தூர், அண்ணாநகர், தி.நகர், அயனாவரம், ஆவடி, திருவல்லிக்கேணி போன்ற பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில், அம்பத்தூர் பால்பண்ணை மற்றும் பால் உபப் பொருட்கள் பண்ணையில் பால்வளத்துறை அமைச்சர் ஆர். எஸ். ராஜ கண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது, பால் பாக்கெட் தயாரிப்பு மற்றும் இயந்திரங்களை பாதுகாப்பான முறையில் கையாளுவது மற்றும் பால் பண்ணையை தூய்மையாக வைத்துக்கொள்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை திறம்பட மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்து, அம்பத்தூர் பால் உபப் பொருட்கள் பண்ணையில் உள்ள உபப் பொருட்கள் தயாரிப்பு பிரிவை ஆய்வு செய்து பால் உற்பத்தி மற்றும் பால் உபப் பொருட்களான இனிப்பு வகைகள், ஐஸ்கிரீம் வகைகள் மற்றும் இதர உபப் பொருட்களின் தயாரிப்பு முறைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வரக்கூடிய பண்டிகை காலங்களான ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை காலங்களில் தேவைப்படும் இனிப்புகள் குறித்து அதிகாரிகளோடு ஆலோசித்தார்.

இதையும் படிக்க |ஓவியம் – சிற்பக் கலை: 6 பேருக்கு கலைச் செம்மல் விருது அறிவிப்பு

அம்பத்தூர் ஆவின் பால்பண்ணை மற்றும் அம்பத்தூர் பால் உபப் பொருட்கள் பண்ணையில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கிய பால்வளத் துறை ஆர். எஸ்.ராஜ கண்ணப்பன்.

எதிர்வரும் பண்டிகை காலங்களில் பால் மற்றும் பால் உபப் பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆலோசனைகளை வழங்கினார்.

மேலும் பால் மற்றும் பால் உபப் பொருட்கள் தரமாகவும் பொதுமக்களுக்கு எந்த தங்கு தடையும் இன்றி பால் மற்றும் பால் உபப் பொருட்கள் விற்பனை செய்து வருவாயை உயர்த்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் எதிர்வரும் வடகிழக்கு பருவமழை காலத்தில் பொது மக்களுக்கு எவ்வித தடையும் இன்றி ஆவின்பால் விநியோகம் செய்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள ஆலோசனை வழங்கினார்.

ஆவின் நிறுவனத்தின் வருவாயை இரட்டிப்பாக்கவும், பால் கொள்முதலை 50 லட்சம் லிட்டர் என்று அதிகரிக்கவும் அந்த இலக்கை எய்திட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

ஆய்வின்போது, பால்வளத்துறை இயக்குநர் மற்றும் ஆவின் மேலாண்மை இயக்குநர் டாக்டர்.சு. வினீத் மற்றும் ஆவின் இணை நிர்வாக இயக்குநர் க. பொற்கொடி, அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

Mumbai: 60-Year-Old Woman Survives High-Risk Tricuspid Valve Replacement Surgery At Wockhardt Hospitals Supported By ECMO

Attendance Of Underprivileged Students Improve Under Social Outreach Programmed By Mumbai School

Kanya Pujan 2024: Date, Shubh Muhurat, Significance And More