அம்பானி வீட்டு திருமண விழா : மணமக்களை நேரில் வாழ்த்திய பிரதமர் மோடி

அம்பானி வீட்டு திருமண விழா : மணமக்களை நேரில் வாழ்த்திய பிரதமர் மோடி

பிரதமர் மோடி வருகை தந்த காட்சி. உடன் முகேஷ் அம்பானி – நீடா அம்பானி

ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சென்டின் திருமண கொண்டாட்டத்தில் நேரில் பங்கேற்ற பிரதமர் மோடி மணமக்களை வாழ்த்தி ஆசிர்வதித்தார்.

அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சென்ட் ஆகியோரின் திருமண நிகழ்ச்சிகள் முகேஷ் அம்பானி மற்றும் நீடா அம்பானியின் மிகவும் பிரமாண்டமான அண்டலியா இல்லத்தில் மாமேரு நிகழ்ச்சியுடன் கடந்த வாரத்தில் தொடங்கியது.

மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் அனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்டுக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. முன்னதாக, அரங்கிற்கு வந்த அனந்த் அம்பானி பிரமாண்டமான இளஞ்சிவப்பு நிற ஆடையை அணிந்திருந்தார். அப்போது அவருக்கு பின்னால் அவரது நண்பர்கள் சிவப்பு நிறத்தில் ஜொலிக்கும் ஆடைகளை அணிந்து வந்தனர். அப்போது அவரை தந்தை முகேஷ் அம்பானி, சித்தப்பா அனில் அம்பானி ஆகியோர் வரவேற்றனர். அத்துடன், நீடா அம்பானி, ஆகாஷ் அம்பானி மற்றும் ஷ்லோகா மேத்தா ஆகியோரும் புன்னகையுடன் வரவேற்று மகிழ்ந்தனர்.

விளம்பரம்இதையும் படிங்க – உலகே வியந்த பிரமாண்டம்…! அனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் பிரம்மாண்ட திருமண விழா ஹைலைட்ஸ்

இந்த திருமண விழாவில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் திரைப்பட நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் என பல தரப்பினரும் பங்கேற்றனர். இதில், அனந்த் மற்றும் ராதிகாவின் உறுதியேற்பு வீடியோவுடன் மண்டபத்தில் எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க – Anant -Radhika Wedding : ”என் இதயத்தின் இரண்டு பகுதிகள்” – உணர்ச்சிவசப்பட்ட நீடா அம்பானி!விளம்பரம்

திருமணத்தை தொடர்ந்து சுப ஆசிர்வாத நிகழ்ச்சிகள் இன்று நடைபெறுகின்றன. இதில் முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து மணமக்கள் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சென்டை ஆசிர்வதித்தார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.

Look, PM Modi has also come to #AnantRadhika’s wedding.#AnantAmbanipic.twitter.com/hCveyoQd6F

— Pradeep Maikhuri (@PradeepMaikhur3) July 13, 2024

விளம்பரம்

ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சென்ட் திருமணத்தில் ரியாலிட்டி டிவி நட்சத்திரம் கிம் கர்தாஷியன் மற்றும் அவரது சகோதரி க்ளோ, நைஜீரிய ராப்பர் ரெமா, முன்னாள் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் மற்றும் எண்ணெய் நிறுவனமான சவுதி அராம்கோ சிஇஓ அமின் நாசர் முதல் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் தலைவர் ஜே லீ மற்றும் மருந்து தயாரிப்பு நிறுவனமான ஜிஎஸ்கே வரை உலக வர்த்தக அதிபர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Anant Ambani
,
ANANT AMBANI RADHIKA MERCHANT WEDDING CELEBRATIONS
,
PM Modi

Related posts

இந்திய வளா்ச்சியில் பங்கேற்க வேண்டும்: சா்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு

பிகாா்: புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்தது

பஞ்சாப் அமைச்சரவை மாற்றம்: 4 போ் நீக்கம்; 5 பேருக்கு பதவி