‘அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறார்’ – எல்.முருகன்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சொல்லியிருக்கிறார் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னையில் இன்று மத்திய மந்திரியும், நீலகிரி தொகுதி பா.ஜ.க. வேட்பாளருமான எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"பிரதமர் மோடி கோவிலுக்கு செல்வது எப்படி தேர்தல் விதிமீறலாக இருக்க முடியும்? எதிர்கட்சிகள் தற்போது தோல்வி பயத்தில் இருப்பதால் இதுபோன்ற கருத்துகளை கூறுகிறார்கள். பிரதமர் கோவிலுக்கு செல்வதையோ, தியானம் செய்வதையோ யாராலும் தடுக்க முடியாது.

மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தில் பல்வேறு ஆன்மீக பணிகளில் ஈடுபட்டிருந்தார். பல கோவில்களை புணரமைத்து, கும்பாபிஷேக விழாக்களை நடத்தினார். சட்டப்பிரிவு 370-ஐ ஜெயலலிதா ஆதரித்து பேசியிருக்கிறார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்று அவர் சொல்லியிருக்கிறார். அவர் பேசியதற்கான ஆதாரம் ராஜ்ய சபா குறிப்பில் உள்ளது."

இவ்வாறு எல்.முருகன் தெரிவித்தார்.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது