அயோத்தி குரங்குகளுக்காக ரூ. 1 கோடி நன்கொடை வழங்கிய அக்‌ஷய் குமார்!

நடிகர் அக்‌ஷய் குமார் குரங்குகளின் உணவிற்காக ரூ.1 கோடியை நன்கொடையாக அளித்துள்ளார்.

நடிகர் அக்‌ஷய் குமார் பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கிறார். அவர் நடித்த படங்கள் விமர்சன ரீதியாகவும் பெரிதாகப் பேசப்பட்டவை. இறுதியாக, சூரரைப் போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கான சர்ஃபிரா படத்தில் நடித்திருந்தார்.

அப்படம் சரியான வெற்றியைப் பெறவில்லை. இருந்தாலும் அக்‌ஷய் குமாரின் நடிப்பு பாராட்டுகளைப் பெற்றது. அவர் நடித்த சிங்கம் அகைன் நாளை (அக்.31) திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதையும் படிக்க: லோகேஷ் கனகராஜ் கதையில் ராகவா லாரன்ஸ்! எல்சியூவின் மிகப்பெரிய வில்லனா?

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியிலுள்ள குரங்குகளுக்கு உணவளிக்கும் தன்னார்வ அமைப்பிற்கு ரூ. 1 கோடியை அக்‌ஷய் குமார் நன்கொடையாகக் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ஆஞ்சநேயா சேவா தொண்டு நிறுவனத்தின் தலைவர் பிரியா குப்தா, “ நாங்கள் குரங்களுக்கு உணவளிப்பது மட்டுமல்லாமல், அவைகளால் மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் சில கவனமான நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். நடிகர் அக்‌ஷய் குமார் பரந்த மனம் கொண்டவர். அவர் பெருந்தன்மையுடன் இந்த நன்கொடையை வழங்கியுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

Related posts

அண்ணாநகரில் ஒரு மணி நேரத்தில் 90 மி.மீ மழை!

இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாமுக்கு திருமணம்!

சென்னை புறநகர் ரயில் சேவையில் நாளை மாற்றம்!