அயோத்தி ராமர் கோயில் மேற்கூரையில் மழைநீர் கசிவு…

அயோத்தி ராமர் கோயில் மேற்கூரையில் மழைநீர் கசிவு… தலைமை அர்ச்சகர் வேதனை!

ராமர் கோயில்

அண்மையில் திறக்கப்பட்ட அயோத்தி ராமர் கோயிலின் மேற்கூரையில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோயில் திறந்து ஆறு மாதங்கள் கூட ஆகாத நிலையில், முதல் பருவ மழைக்கே மேற்கூரையில் நீர் கசிவு பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ், இப்படியெல்லாம் நடக்கும் என்று எவரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள் என்றார். குறிப்பாக ராமர் சிலை அமைந்துள்ள இடத்தின் அருகில் கூரையில் கசிவு ஏற்படுவது பக்தர்களுக்கு கவலை தந்திருப்பதாக தெரிவித்தார். ஒட்டுமொத்தமாய் அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் மற்றும் அவற்றின் செயல்முறைகள் மீது அவர் பல்வேறு கவலைகளை முன்வைத்துள்ளார்.

விளம்பரம்

தற்போதைக்கு ராமர் சிலைக்கு அருகே மழைநீர் தேங்குவதை சரிசெய்யாவிடில் வழிபாடு மற்றும் பூஜை நடைமுறைகளை மேற்கொள்வதை அது சிக்கலாக்கும் எனவும் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் கவலை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இதுகுறித்து விளக்கமளித்துள்ள அயோத்தி ராமர் கோயில் கட்டுமானக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா, இரண்டாம் தளத்தில் மேற்கூரை திறந்திருப்பதாலும், முதல் தளத்தில் கட்டுமான பணிகள் நடைபெறுவதால் சிறிது நீர் கசிவு இருப்பதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க:
முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் செம்மொழி நாளாக கொண்டாடப்படும் – அமைச்சர் சாமிநாதன்

விளம்பரம்

சன்னதி பகுதியில் நீர்வடிகால் வசதி இல்லை ஏனெில் அனைத்து மண்டபங்களும் தண்ணீரை அகற்றுவதற்கான சாய்வை பெற்றிருப்பதாகவும், வடிவமைப்பு அல்லது கட்டுமானப் பிரச்னை எதுவும் இல்லை என்றும் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
ayodha
,
Ayodhya Ram Temple

Related posts

விடைத்தாள் மதிப்பீட்டு முறையில் புதிய மாற்றம் – டி.என்.பி.எஸ்.சி. முடிவு

திரைக்கதிர்

அவல் லாடு