அரக்கோணம் யார்டில் பொறியியல் பணி: 16 மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம்

அரக்கோணம் யார்டில் பொறியியல் பணி: 16 மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம்

சென்னை: சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் மார்க்கத்தில், அரக்கோணம் யார்டில் பொறியியல் பணி காரணமாக, 16 மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

அதன் விவரம்: சென்னை சென்ட்ரல் – அரக்கோணத்துக்கு ஆக.30, 31 ஆகிய தேதிகளில் காலை 8.20, 9.10, 11 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், திருவள்ளூர் – அரக்கோணம் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளன.

சென்னை சென்ட்ரல் – திருத்தணிக்கு ஆக.30, 31 ஆகிய தேதிகளில் காலை 10, முற்பகல் 11.45 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், திருவள்ளூர் – திருத்தணி இடையே பகுதி ரத்துசெய்யப்பட உள்ளன.

திருத்தணி – சென்னை சென்ட்ரலுக்கு ஆக.30-ம் தேதி காலை 10.15 மணிக்கும், ஆக.30, 31, செப்.1 ஆகிய தேதிகளில் நண்பகல் 12.35 மணிக்கும் புறப்பட வேண்டிய மின்சார ரயில்கள், திருத்தணி – திருவள்ளூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளன.

அரக்கோணம் – சென்னை சென்ட்ரலுக்கு ஆக.30, 31, செப்.1 ஆகிய தேதிகளில் முற்பகல் 11.15, நண்பகல் 12, மதியம் 1.50 ஆகிய நேரங்களில் புறப்பட வேண்டிய மின்சார ரயில்கள், அரக்கோணம் – திருவள்ளூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளன.

திருத்தணி – சென்னை சென்ட்ரலுக்கு ஆக.31, செப்.1 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், திருத்தணி – திருவள்ளூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

சென்னை கடற்கரை – திருத்தணிக்கு செப்.1-ம் தேதி நண்பகல் 12.10 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், திருவள்ளூர் – திருத்தணி இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

சென்னை சென்ட்ரல் – அரக்கோணத்துக்கு செப்.1-ம் தேதி நண்பகல் 12.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், திருவள்ளூர் – அரக்கோணத்துக்கு இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

அரக்கோணம் – சென்னை சென்ட்ரலுக்கு செப். 1-ம் தேதி பிற்பகல் 3.40 மணிக்கு இயக்கப்பட வேண்டிய மின்சார ரயில், அரக்கோணம் – திருவள்ளூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

சென்னை சென்ட்ரல் – திருப்பதிக்கு செப்.1-ம் தேதி காலை 9.50 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், சென்னை சென்ட்ரல் – திருத்தணி இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இத்தகவல் தெற்கு ரயில்வே வெளியிட்ட ்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்